தப்பை தட்டி கேட்டவர் மீது அரிவாளால் பதில் கூறிய சிறுவர்கள், திருப்பூர் காவல்துறையினர் விசாரணை

Admin
0 0
Read Time1 Minute, 32 Second

திருப்பூர் : திருப்பூர் பாளையக்காடு, சூர்யா நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ்.(26). இவர் அதே பகுதியில் மளிகைக் கடை வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை, என்.ஆர்.கே புரத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் சூர்யா நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றுளனர். அவர்களை தடுத்து நிறுத்திய ராஜேஷ், குழந்தைகள் இருக்கும் பகுதியில் ஏன் இவ்வளவு வேகமாக பைக் ஒட்டி செல்கிறீர்கள் என கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுவர்கள் தங்கள் பகுதியில் உள்ள மேலும் சிலருடன் அரிவாள், கம்பி போன்ற ஆயுதங்களுடன் வந்து, ராஜேஷை தாக்கியுள்ளனர் இதுகுறித்து அப்பகுதி மக்கள் திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட ஐந்து சிறுவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர். வெட்டு காயங்களுடன் ராஜேஷ் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை இருவர் கைது

183 கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் 26.05.2020 அன்று கன்னியாகுமரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. அன்பரசு அவர்கள் லீபுரம் பட்டுக்குளம் பகுதியில் ரோந்து சென்றார். […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami