FOP சார்பாக காவலர்களுக்கு சத்து பானங்கள் வழங்கிய DGP பிரதீப் பிலிப் மற்றும் சென்னை காவல் ஆணையர்

Admin
Read Time2 Minute, 14 Second

சென்னை : தமிழ்நாடு காவல் நண்பர்கள் குழு சார்பாக காவல்துறை இயக்குநர் மற்றும் காவல் ஆணையாளர் அவர்கள் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் ஆளிநர்களுக்கு சத்து பானம் மற்றும் பொருட்கள் வழங்கினர். டாக்டர் பிரதீப் வி.பிலிப், இ.கா.ப., தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை அவர்கள் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் இணைந்து தமிழ்நாடு காவல் நண்பர்கள் குழு மற்றும் துரை பவுன்டேசன் சார்பாக, இன்று 21.05.2020 காலை இராயப்பேட்டை, மியூசிக் அகாடமி அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை பெருநகர போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு சத்து பானங்கள் (Energy Drinks) மற்றும் Candid Dusting Powder போன்ற பொருட்களை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு 4,000 சத்து பானங்கள் மற்றும் சரும தொற்று ஏற்படாமல் தடுக்க 4,000 Candid Dusting Powder ஆகியவை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், துரை பவுன்டேஷனின் செயலாளர் மருத்துவர் சுமித்ரா பிரசாத், சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் இணை ஆணையாளர் (தெற்கு) திரு.க.எழிலரசன், இ.கா.ப., துணை ஆணையாளர்கள் திரு.பெரோஸ்கான் அப்துல்லா, இ.கா.ப., (போக்குவரத்து/கிழக்கு), திரு.தேஷ்முக் சேகர் சஞ்சய், இ.கா.ப., (மயிலாப்பூர்) திரு.ஆர்.திருநாவுக்கரசு, இ.கா.ப., (நுண்ணறிவுப்பிரிவு) மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
1 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கள்ளசாராயம் கடத்தலில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்த வேலூர் காவல்துறையினர்

90 வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார் இ.கா.ப..,அவர்களின் உத்திரவின் படி வேலூர் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் திருமதி. செந்தில்குமாரி ஆகியோர் தனிப்படையினர் […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

7 0 #policenewsplus #TNPolice #police #policeofficer #policeforlife
2 0 Say NO to Tobacco #notobacco #notobaccoday #notobacco🚭
11 0 கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து பணிக்கு திரும்பிய காவலர்கள் சென்னை : சென்னை பெருநகர காவல், ஆயுதப்படையில் பணிபுரியும் 1...
12 0 தமிழக உளவுத்துறையின் புதிய ஐஜியாக ஈஸ்வரமூர்த்தி,IPS நியமனம் தமிழக உளவுத்துறை காவல்துறை தலைவர் திரு.சத்தியமூர்த்தி இன்றுடன் பணி ஒய்வு பெறுகிறார்....
17 0 சிறு வியாபாரிகள் 75 பேருக்கு நிவாரண பொருட்களை நேரில் சென்று வழங்கிய போலீசார் தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி...
7 0 பணம் வைத்து சூதாடிய 20 நபர்கள் கைது திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு, பட்டிவீரன்பட்டி மற்றும் ஒட்டன்சத்திரம் காவல்...
20 0 உளவுத்துறை IG சத்தியமூர்த்தி உள்பட 4 முக்கிய காவல்துறை உயர் அதிகாரிகள் இன்றுடன் ஒய்வு சென்னை: தமிழக உளவுத்துறை காவல்துறை...
27 0 #tnpolice #dgp
37 1 கொரோனா சிகிச்சை முடித்து இன்று பணிக்கு திரும்பிய அண்ணாநகர் துணை ஆணையாளர் அவர்களை அண்ணாநகர் காவல் நிலைய வளாகத்தில் சென்னை...
5 0 Happy Ramadan #tnpolice #policenewsplus #ramadan
30 0
4 0
7 0
15 0
8 0

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Bitnami