போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக திருவள்ளூரில் வசிக்கும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகம்

Admin
Read Time3 Minute, 30 Second

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று புதிதாக 25 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 492 ஆக உயர்ந்து இருக்கிறது.

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரானா வைரசை ஒழிக்க, அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளை மாநில அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. தடுப்பு பணிகளில் மருத்துவம், சுகாதாரம் மற்றும் காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறையினரும் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

வெளிமாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தமிழகம், கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் பணியாற்றி வருகிறார்கள். கொரோனா ஊரடங்கால் அனைத்து தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டுவிட்டன. இதனால் புலம் பெயர்ந்த வடமாநில தொழிலாளர்கள் வேலையின்றி கையில் பணமுமின்றி அவதிப்பட்டு வருகின்றார்கள். வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்றும் கூற்றுக்கு ஏற்ப, வெளி மாநில தொழிலாளர்களுக்கு காவல்துறையினரும், பல்வேறு தன்னார்வலர்களும் உதவி வருகின்றனர்.

வெளி மாநில தொழிலாளர்களுக்கு உதவும் விதமாக நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு. சார்லஸ் அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில்,  நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட மகளிர் அணி தலைவி திருமதி.ரமிஜா, பல வெளிமாநில தொழிலாளர்களுக்கு அரிசி, மளிகை மற்றும் காய்கறிகள் வழங்கினார். அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பை பெற்றுக் கொண்ட வெளி மாநில தொழிலாளர்கள் மனதார நன்றி தெரிவித்து பெற்றுச் சென்றனர்.

வறுமையில் வாடுவோர்க்கும், தேவை இருப்போர்க்கும் கொடுப்பதே ஈகை. எதுவும் இல்லை என்றாலும் மகிழ்ந்து, மெழுகாய் உருகி தன்னலம் இன்றி பிறர் நலத்திற்காக உடலை, உயிரை அர்பணித்து தியாக மனதோடு, தனக்கு இல்லாவிட்டாலும் கூட பிறருக்கு, கொடுத்து உதவும் நல்மனதோடு  நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட மகளிர் அணி தலைவி திருமதி.ரமிஜா அவர்கள் சேவை செய்து வருகின்றார்.

2 0

About Post Author

Admin

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உதவிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

107 இராமநாதபுரம்:  இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வேலாயி என்ற கூலி தொழிலாளி தன் மகளுடன் வசித்து வருகின்றார். இவருக்கு வாய்பகுதியில் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் இவரது பெண் […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

7 0 #policenewsplus #TNPolice #police #policeofficer #policeforlife
2 0 Say NO to Tobacco #notobacco #notobaccoday #notobacco🚭
11 0 கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து பணிக்கு திரும்பிய காவலர்கள் சென்னை : சென்னை பெருநகர காவல், ஆயுதப்படையில் பணிபுரியும் 1...
12 0 தமிழக உளவுத்துறையின் புதிய ஐஜியாக ஈஸ்வரமூர்த்தி,IPS நியமனம் தமிழக உளவுத்துறை காவல்துறை தலைவர் திரு.சத்தியமூர்த்தி இன்றுடன் பணி ஒய்வு பெறுகிறார்....
17 0 சிறு வியாபாரிகள் 75 பேருக்கு நிவாரண பொருட்களை நேரில் சென்று வழங்கிய போலீசார் தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி...
7 0 பணம் வைத்து சூதாடிய 20 நபர்கள் கைது திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு, பட்டிவீரன்பட்டி மற்றும் ஒட்டன்சத்திரம் காவல்...
20 0 உளவுத்துறை IG சத்தியமூர்த்தி உள்பட 4 முக்கிய காவல்துறை உயர் அதிகாரிகள் இன்றுடன் ஒய்வு சென்னை: தமிழக உளவுத்துறை காவல்துறை...
27 0 #tnpolice #dgp
37 1 கொரோனா சிகிச்சை முடித்து இன்று பணிக்கு திரும்பிய அண்ணாநகர் துணை ஆணையாளர் அவர்களை அண்ணாநகர் காவல் நிலைய வளாகத்தில் சென்னை...
5 0 Happy Ramadan #tnpolice #policenewsplus #ramadan
30 0
4 0
7 0
15 0
8 0

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Bitnami