Read Time1 Minute, 4 Second
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வழிவிட்டான் அய்யனார் கோவில் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது அதில் ஒரு வாளை சட்டத்திற்குப் புறம்பாக எடுத்து வந்த விநாயக மூர்த்தி என்பவரை SI திரு.முருகனாதன் அவர்கள் Indian Arms Act-ன் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை மங்கலக்குடி சுடுகாடு அருகே சட்டத்திற்கு புறம்பாக பணம் வைத்து சீட்டு விளையாடிய 04 பேரை SI திரு.சுதர்சன் அவர்கள் TNG Act-ன் கீழ் கைது செய்தார்.
நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்