Read Time54 Second
அரியலூர் : அரியலூர் மாவட்டத்தில் உடையார்பாளையம் பகுதியில் சிறுமியிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்ட ஒரு நபர் மீதும், விக்கிரமங்கலம் பகுதியில் சிறுமியிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்ட ஒரு நபரின் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் திருமதி. இரத்தினா இ.ஆ.ப., அவர்கள் உத்தரவின்படி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.