வடமாநில இளைஞர்களுக்கு உதவிய அனுப்பர்பாளையம் காவல்துறையினருக்கு திருப்பூர் காவல் ஆணையர் பாராட்டு

Admin
0 0
Read Time1 Minute, 27 Second

திருப்பூர்: திருப்பூர் மாநகர போயம்பாளையம் பகுதியில் அனுப்பர்பாளையம் காவல் நிலைய காவலர்கள் வாகன தணிக்கை இரவு அலுவலில் இருந்த போது அவ்வழியாக வடமாநில இளைஞர்கள் நடந்து சென்றனர். அவர்களை விசாரித்தபோது மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், சாப்பாட்டிற்கு ஆதாயம் இல்லாததால் நடந்தே தங்களது ஊருக்கு செல்வதாகவும் கூறினார்கள்.

அப்போது பணியில் இருந்த முதல் நிலை காவலர் 664 திரு. பழனிச்செல்வம் மற்றும் காவலர் 841 திரு.குகநாதன் அவர்கள் நிலைமையை எடுத்துக்கூறி, அனுப்பர்பாளையம் ஆய்வாளர் அவர்கள் அறிவித்தலின்படி வட மாநிலத்தவர்களுக்கு அரிசி மற்றும் அத்தியாவசிய காய்கறிகள் கொடுத்து உதவினார்கள். உதவியை பெற்று கொண்ட வடமாநில இளைஞர்கள் காவல்துறையினருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

இந்த செயலை செய்த காவலரை திருப்பூர் மாநகர காவல் ஆணையர் மற்றும் மாநகர காவல் துணை ஆணையர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கொரோனா வைரஸ் தொற்று கண்ணீர் மூலம் பரவுமா ?

218 கொரோனா வைரஸ் தொற்று கண்ணீர் மூலம் பரவ வாய்ப்பு உள்ளதாக கண் மருத்தவர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர் பிரீத்தி பேசிய போது, […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami