Read Time1 Minute, 3 Second
திருநெல்வேலி : கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக மத்திய,மாநில அரசுகள் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் தமிழ்நாடு அரசு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றும் காவல்துறையினருக்கு வைட்டமின் மாத்திரைகள் வழங்க அறிவுறித்தியுள்ளது. இதனை நடைமுறைப்படுத்தும் விதமாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஓம்பிரகாஷ் மீனா இ.கா.ப அவர்கள் திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினரின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 2066 காவல் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருக்கு வைட்டமின் மாத்திரைகள் மற்றும் கபசுரக் குடிநீர் பொடி ஆகியவற்றை வழங்கியுள்ளார்.