Read Time1 Minute, 12 Second
இராமநாதபுரம் : நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சாலைகளிலும், பொது இடங்களிலும் மக்களிடன் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனைப்பயன்படுத்தி ராமநாதபுரத்தில் மர்ம நபர்கள் ஏடிஎம்மை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி கிழக்கு கடற்கரை சாலையில் இயங்கி வருகிறது ஸ்டேட் பேங்க். இந்த வங்கியின் ஏடிஎம்மை உடைத்து மர்மநபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இரவில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் ஏ,டி,எம் இயந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு வங்கி நிர்வாகத்திற்கு தகவல் அளித்துள்ளனர். மேலும் கொள்ளை முயற்சி தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்