143
மதுரை : மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் 144 ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் சரியாக கடை பிடிக்கிறார்களா? என
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன். இ.கா.ப அவர்கள் ஆளில்லா விமானம் மூலம் பார்வையிட்டு கண்காணித்து, மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மதுரை மாவட்ட காவல்துறை வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்படுவதை ஆய்வு செய்தார்.
ADSP திருமதி. வனிதா அவர்கள் மற்றும் திருமங்கலம் நகர்
காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.பரமேஸ்வரி ஆகியோர் உடன் இருந்தார்.
மதுரையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்