ஊரடங்கின் போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களைப் பெற்று கொள்ள என்ன ஆவணங்கள் வழங்க வேண்டும் – காவல்துறை அறிவிப்பு

Admin
0 0
Read Time1 Minute, 56 Second

சென்னை:  ஊரடங்கு நடைமுறையை மீறியவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் உரிய ஆவணங்களுடன் வந்து பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக காவல்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக காவல்துறையினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்இ 24-03-2020 முதல் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களைத் திரும்ப பெற்றுக் கொள்ளலாம். தினசரி காலை 07-00 மணி முதல் பகல் 12: 30 வரை ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு 30 நிமிடத்திற்கு ஒருமுறை 10 நபர்களுக்கு என வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கப்படும்.

இத்தருணத்தில் சமூக இடைவெளி அவசியம் கடைப்பிடிக்க வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அந்தந்த காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வழங்கப்படும்.

24-03-2020 அன்று முதல் குஐசு பதிவு செய்யப்பட்ட வரிசைப்படி வாகன உரிமையாளர்களுக்கு எந்த இடத்தில் வந்து வாகனங்களை பெற்றுக் கொள்ளவேண்டும் என்ற தகவல் அனுப்படும். அவர்கள் நேரில் வந்தவுடன் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வாகனங்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்படும்.

வாகன உரிமையாளர்கள் கொண்டு வரவேண்டிய ஆவணங்கள் : வாகன உரிமையாளரின் டிரைவிங் லைசென்ஸ் ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ் மற்றும் வாகனத்தின் ஆர்.சி.புத்தகம் ஒரிஜினல் மற்றும் ஜெராகஸ் காண்பித்து பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வாயில்லா ஜீவன்களுக்கு உணவு அளித்த மதகுபட்டி காவல் உதவி ஆய்வாளர்

196 சிவகங்கை : ஊரடங்கு உத்தரவால் மதகுபட்டி பகுதியில் சுற்றி திரியும் குரங்குகள் – உணவு கிடைக்காமல் தவிக்கும் குரங்குகளுக்கு உணவளிக்கும் மதகுபட்டி காவல்நிலைய உதவி ஆய்வளர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami