வீடு தேடிச் சென்று மளிகை பொருட்களை வழங்கும் காவல்துறை அதிகாரிகள்.

Admin
0 0
Read Time1 Minute, 25 Second

அரியலூர் : அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆதரவற்ற மற்றும் முதியவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R. ஸ்ரீனிவாசன் அவர்கள் மற்றும் அரியலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. திருமேணி அவர்கள் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள முதியவர்களுக்கு உதவிடுமாறு அறிவித்தனர்.

இதனை தொடர்ந்து அரியலூர் காவல் நிலைய சரக பகுதியிலுள்ள வாலாஜா நகரம், ரெங்கசமுத்திரம், சுப்புராயபுரம், வெளிபிரிங்கியம் மற்றும் பாலகிருஷ்ணாபுரம் போன்ற கிராமங்களில் ஆதரவற்ற மூதாட்டிகளுக்கு பருப்பு,சோப்பு,காய்கறி உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய மளிகை பையை அரியலூர் நகர காவல் ஆய்வாளர் திரு. சிவராஜ் அவர்கள் வயது முதியோரின் வீட்டிற்கு நேரில் சென்று வழங்கினார்கள். மேலும் ஊரடங்கு உத்தரவை மதித்து வீட்டில் இருக்கும்படியும் அறிவுறுத்தினார்கள். உடன் அரியலூர் காவல்நிலைய காவலர்கள் இருந்தார்கள்.

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திருநெல்வேலியில் 1680 நபர்கள் மீது 1215 வழக்குகள் பதிவு

116 திருநெல்வேலி: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக மத்திய,மாநில அரசுகள் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் யாவரும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து மற்ற காரணங்களுக்காக […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami