மதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம் செய்யப்படுள்ளது. காவல் துணை ஆணையர் சட்டம் மற்றும் ஒழுங்கு திரு கார்த்திக் IPS., அவர்கள் வீட்டில் இருந்தபடியே காய்கறிகளை விலை கொடுத்து பெற்றுக்கொண்டார்கள். பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கு தேவையான அனைத்து காய்கறிகளையும் தங்களது வீட்டில் இருந்தபடியே பெற்றுக் கொள்ளலாம். இனிமேல் யாரும் காய்கறிகள் வாங்க மார்க்கெட்டிற்கு செல்ல வேண்டாம் உங்களை கொரோனா தொற்று நோயிலிருந்து பாதுகாக்கவே காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்களும் மதுரை மாநகராட்சியும் இணைந்து இந்த நடமாடும் காய்கறி கடைகள் செயல்பட வழிவகை செய்துள்ளனர். ஆகவே அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வீட்டில் பாதுகாப்பாக இருக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
Need vegetables
Vegetables needed