86
Read Time50 Second
சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் காவல் ஆய்வாளர் திரு. ஆனந்த் பாபு அவர்கள் சென்னையை சேர்ந்த நபர் ஒருவரின் உதவியுடன், ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கிட ஏற்பாடு செய்தார்.
இதனையடுத்து 29.03.2020-ம் தேதியன்று திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் திரு. தர்மராஜன் இ.கா.ப அவர்கள் மற்றும் உதவி ஆணையர் திரு. முத்துவேல் பாண்டி அவர்கள் சுமார் 340 அரிசி மூட்டைகளை வழங்கினர். அப்பகுதியில் உள்ள ஏழை எளிய மக்கள் மற்றும் திருநங்கையினர் நன்றி தெரிவித்து பெற்று சென்றனர்.