கொரோனா நோய் தொற்று குறித்து வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திய நெல்லை மாநகர காவல் துறையினர்.

Admin
0 0
Read Time1 Minute, 23 Second

நெல்லை : கொரோனா நோய்த்தொற்று பரவலாக நாடுமுழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், 144 ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் காவல்துறை கட்டுப்பாட்டை மீறி சிலர் வெளியே சென்று வருகின்றனர். இந்த நிலையில் பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த நெல்லை மாநகர பேட்டை காவல் துறையினர் அப்பகுதி முழுவதும் சுற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். அப்போது இந்த நோயின் பாதிப்புகள் குறித்தும், ஊரடங்குச் சட்டம் குறித்தும் கொரோனா நோயால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதை தவிர வேறு யாரும் வெளியே வரவேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டனர். இந்த விழிப்புணர்வு அணிவகுப்பு மாநகர உதவி காவல் ஆணையாளர் திரு. சதீஷ் குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பாதுகாப்பு பணியில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் உடல் பரிசோதனை காவல் ஆணையர் உத்தரவு .

138 மதுரை : காவல் ஆணையர் திரு.டேவிசன் தேவாசீர்வாதம் இ.கா.ப. அவர்கள் உத்தரவுப்படி 144 ஊரடங்கு தடை உத்தரவு பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami