வெளிநாட்டில் இருந்து வந்து தனிமைப்படுத்தி வைக்கப்பட்டோரை கண்காணிக்க சிவகங்கை எஸ்பி உருவாக்கிய செயலி

Admin
Read Time3 Minute, 38 Second

சிவகங்கை: வெளிநாட்டில் இருந்து வந்து தனிமைப்படுத்தி வைக்கப்பட்டோரை கண்காணிக்கும் புதிய செயலி சிவகங்கை மாவட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

உலக நாடுகளை கரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இதையடுத்து இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் வெளிநாட்டில் இருந்து வந்த நபர்களால் தான் கரோனா வைரஸ்தொற்று பரவி வருகிறது. இதனால் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தி 28 நாட்கள் சுகாதாரத்துறை கண்காணித்து வருகிறது. இருந்தபோதிலும் பலர் வெளியில் சுற்றித் திரிகின்றனர். அவர்களை ஒவ்வொருவரையும் தனித்தனியாக கண்காணிப்பதில் சிரமம் உள்ளது.

வெளிநாட்டில் இருந்து வந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ள 10 மாவட்டங்களில் சிவகங்கையும் ஒன்றாக உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் மார்ச் 1-ம் தேதியில் இருந்து 3,039 பேர் வந்துள்ளனர். அவர்களை எளிதில் கண்காணிக்கும் வகையில் புதிய செயலியை சிவகங்கை எஸ்.பி ரோஹித்நாதன் கண்டுபிடித்தார்.

இந்த செயலியில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களின் விபரம், மொபைல் எண் பதியப்படும். இந்த செயலி மூலம் அவர்களை போலீஸார் அலுவலகத்தில் இருந்தபடியே கண்காணிக்க முடியும். அவர்கள் வீட்டை விட்டு வெளியேறினால், உடனடியாக மாவட்ட காவல் கட்டுப்பாடு அறைக்கு தகவல் வரும்.

உடனடியாக அந்த நபரை தொடர்பு கொண்டு அறிவுறுத்தலாம். அதையும் மீறினால் அவரது வீட்டுக்கே சென்றே எச்சரிக்க முடியும். இந்த செயலியை சிவகங்கை மாவட்டத்தில் கதர்கிராமத் தொழில்கள் நலவாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் அறிமுகப்படுத்தினார்.

மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன், எஸ்பி ரோஹித்நாதன், எம்எல்ஏ நாகராஜன், உதவி எஸ்பி கிருஷ்ணராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் லதா உடனிருந்தனர்.

தொடர்ந்து அமைச்சர் பாஸ்கரன் கூறுகையில், ‘ வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை தொடர்ந்து சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

முதற்கட்டமாக வெளிநாட்டில் இருந்து வந்த 480 பேரில் 200 பேருக்கு 28 நாட்கள் மருத்துவ கண்காணிப்பு முடிவடைந்து விட்டது. அவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை. மற்றவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதற்கு எஸ்பி உருவாக்கிய செயலி பயனுள்ளதாக இருக்கும். இந்த செயலியை மற்ற மாவட்டங்களிலும் பயன்படுத்த முடிவு செய்துள்ளனர், என்று கூறினார்.

நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்

1 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஆதரவற்றோர் மற்றும் தினக்கூலி பணியாளர்களுக்கு உணவு வழங்கிய தூத்துக்குடி காவலர்கள்

60 தூத்துக்குடி: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 26.03.2020ம் தேதி முதல் 21நாள் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில், வீடற்றவர்களின் நிலை கேள்விக்குறியானது. மற்றும் அந்தப் பகுதிவாழ் […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

5 0 அதிக வட்டி வசூல் செய்தாலோ அல்லது கடன் பெற்ற நபரை துன்புறுத்தினாலோ கடும் நடவடிக்கை, காவல்துறையினர் எச்சரிக்கை மதுரை :...
10 0 போதை கடத்தல் வழக்குகளில் தொடர்ந்து அதிரடி காட்டும் இராமநாதபுரம் காவல்துறையினர் ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் இருந்து கடந்த...
7 0 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது. திருப்பூர் : திருப்பூர் மாநகர அவிநாசி காமராஜர் நகரைச் சேர்ந்தவர் கார்த்திக்(28) இவரை...
17 0 யானைக்கு ஐந்தறிவாம் ! மனிதனுக்கு ? - திருநெல்வேலி துணை ஆணையர் திரு.சரவணன் திருநெல்வேலி மாநகர சட்டம் ரூ ஒழுங்கு...
6 0 அரக்கோணம் மக்கள் மனம் கவர்ந்துள்ள புதிய காவல் ஆய்வாளர் கோகுல்ராஜ் ராணிப்பேட்டை : அரக்கோணம் முன்னர் வேலூர் மாவட்டத்தின் ஒரு...
9 0 நத்தம் காவல் ஆய்வாளரின் உன்னத சேவை, பொதுமக்கள் பாராட்டு திண்டுக்கல் :உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரசால் அரசால் பல...
7 0 ஊனமுற்றோருக்கு உதவி பெண் ஆய்வாளர் திருவள்ளூர்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று அதிகரித்து காணப்படுவதால் 144 தடை உத்தரவு...
10 0 பயணிகள் தனிநபர் இடைவெளி குறித்து விழுப்புரம் SP துண்டுபிரசுரம் விழுப்புரம் : 50 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும் என...
9 0 கடலூர் மாவட்ட காவல்துறையினரின் விழிப்புணர்வு மற்றும் பாராட்டுக்க்கள் கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு M. ஸ்ரீ...
3 0 மதுரையில் ஒருவருக்கு குண்டர் தடுப்பு சட்டம் மதுரை : மதுரை, சொக்கநாதபுரம், புது விளாங்குடியைச் சேர்ந்த அன்னக்கொடி மகன் பழனிகுமார்...
8 0 வழி தெரியாதவரை அவரது உறவினருடன் சேர்த்த காவலருக்கு பாராட்டு. திருப்பூர் : திருப்பூர் மாநகர தெற்கு காவல் நிலைய இரண்டாவது...
13 0 வாளால் தாக்கி கொலை மிரட்டல், 1 கைது சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வைகை வடகரை பகுதியை...
7 0 வாளால் கேக் வெட்டி பிறந்தநாள், காவல்துறையினர் நடவடிக்கை இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில் வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியவர்களை...
7 0 போக்குவரத்துக்காக தமிழகம் 8 மண்டலங்களாக பிரிப்பு – எந்த மண்டலம்? எந்த மாவட்டம்? தமிழகத்தில் ஜூன் 30-ம் தேதி வரை...
6 0 முடிதிருத்தம் செய்யும் ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்த திண்டுக்கல் காவல்துறையினர் திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் முடி திருத்தம்...

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami