பொதுமக்களுக்கு கொரோனா நோய் பரவாமல் தடுப்பதற்காக காவல் ஆணையர் அவர்கள் வேண்டுகோள்

Admin

மதுரை: மதுரை மாநகரில் பொது இடங்களில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது மிகவும் வேதனை அளிக்கிறது.

இருசக்கர வாகனங்கள் நான்குசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களில் மக்கள் அதிகம் பயணம் செய்து
வருகிறார்கள் இதன்மூலம் அதிகமாக கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவ வாய்ப்புக்கள் உள்ளதால் பொதுமக்கள் அனைவரும் தங்களது பயணத்தை முற்றிலும் தவிர்க்வேண்டும்.

தங்களுடைய பாதுகாப்பிற்காகவும் தங்களது குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காகவும்வெளி இடங்களுக்கு செல்வதை முற்றிலும் தவிர்த்து வீட்டில் மட்டுமே இருக்கும்படி அன்புடன் கேட்டுகொள்ளப்படுகிறது.

கொரோனா வைரஸ் நம்மை பாதிக்காது என்று யாரும் அலட்சியமாக இருந்துவிட வேண்டாம் ஒருவருக்கு நோய்தொற்று ஏற்பட்ட 14 நாட்களுக்கு பிறகுதான் அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்படுகிறதுஆகவே உடனடியாக நோய்தொற்று தெரிய வாய்ப்புக்கள் குறைவு. எனவே அவ்வாறு நோய்தொற்று இருப்பது தெரியாமலேயே வெளியில் அவர்கள் செல்வதன் மூலமாக பிறருக்கும் பரவ அதிக வாய்புக்கள் உள்ளது ஆகவே யாரும் வெளியில் செல்லவேண்டாம்.

அத்தியாவசியப்பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மட்டும்மே திறக்கப்பட வேண்டும் மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்படவேண்டும். அவ்வாறு செய்வதால் நோய்தொற்று பரவுவதை தடுக்கலாம்.

பொது இடங்களில் கூட்டங்கூட்டமாக நிற்பதால் சமூக பரவல் மூலம் நோய்தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது அவற்றை முற்றிலும் தவிர்க்கவேண்டும்..

நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டிற்கு யாரும் செல்ல வேண்டாம் தங்களது வீட்டிற்கு உறவினர்களோ நண்பர்களோ வருவதை அனுமதிக்கவும் வேண்டாம்.

வீட்டிற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை குடும்பத்தில் உள்ள ஒரு நபர் மட்டும் வெளியில் சென்று வாங்கிவிட்டு உடனே வீட்டிற்கு திரும்பவும். அவ்வாறு வெளியில் சென்றுவிட்டு வரும்போது கை மற்றும் கால்களை நன்கு சுத்தம் செய்தபின் வீட்டிற்குள் அனுமதிக்கவும்.

அனைவரும் கிருமி நாசினி சுத்திகரிப்பு திரவம் மூலம் கைகளை அடிக்கடி
சுத்தம் செய்ய வேண்டும்.

ஒருவருக்கொருவர் ஒரு மீட்டர் இடைவெளியில் இருப்பது மிகவும் அவசியமானது.

கொரோனா வைரஸ் மதுரை மாநகரில் பரவாமல் தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக மிக முக்கியமான ஒன்று.

பொதுமக்களாகிய உங்களை பாதுகாக்கவேண்டியது காவல்துறையின் மிக முக்கியமான கடமையாகும். காவல் ஆணையர் அவர்களின் உத்தரவுகளை அனைவரும் கடைபிடித்து நோய்தொற்று பரவாமல் அவற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வது மிக மிக அவசியம்.

அரசு அறிவித்துள்ள 144 தடை உத்தரவுகளை 8 நாட்களுக்கு அனைவரும் கடைபிடிக்கும்படியும் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு தரும்படியும் அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காவல்துறையினர் பாதுகாப்பிற்கு முககவசங்கள் நன்கொடை

13 திருவள்ளூர் : கொரோனா வைரஸ் தொற்று நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக திருவள்ளூர் மாவட்ட காவல்துறையினருக்கு ஸ்ரீ நிகேதன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியின் சார்பாக பள்ளி தாளாளர் […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami