Read Time1 Minute, 2 Second
மதுரை : மதுரை மாவட்டத்தில் குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் வலைபின்னல் திட்டத்தின் (CCTNS) மூலமாக, குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட வாகனங்களை கண்டுபிடித்து அதனை உரிய நபர்களிடம் ஒப்படைத்தும், அடையாளம் தெரியாத பிரேதத்தை, காணாமல் போன நபர்களுடன் ஒப்பிட்டு பார்த்து உறவினர்களுக்கு தெரியபடுத்தி CCTNS ல் உள்ள பல்வேறு பயன்பாடுகளை பொது மக்களுக்கு நேரடியாக கொண்டு சேர்த்து சிறப்பாக பணியாற்றிய காவலர்களை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர். திரு.N.மணிவண்ணன்.IPS., அவர்கள் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்