110
Read Time52 Second
தேனி : 01.03.1995-ம் தேதி காவல்துறையில் பணியில் சேர்ந்து 25 ஆண்டுகள் சிறப்பான முறையில் பணிபுரிந்த தலைமை காவலர்களுக்கு, சிறப்பு சார்பு ஆய்வாளர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 21 தலைமை காவலர்களுக்கு சிறப்பு சார்பு ஆய்வாளர்களாக பதவி உயர்வு ஆணையை தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய் சரண் தேஜஸ்வி,இ.கா.ப., அவர்கள் பிறப்பித்தார். மேலும் பதவி உயர்வு பெற்றவர்களின் பணி சிறக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.