Read Time1 Minute, 1 Second
கேரளா: இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் வைரசை காட்டிலும் அது தொடர்பான போலி செய்திகள் சமூக வலைதளங்களில் படுவேகமாக பரவி வருகிறது.
கேரளாவில் கொரோனா குறித்த தவறான செய்திகள் பெருமளவில் பரப்படுகிறது. இந்த போலி செய்திகளால் மக்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
கொரோனா வைரஸ் குறித்து சமூக வலைதளங்களில் போலி செய்திகளை வெளியிட்டு பொதுமக்களிடையே அச்சத்தை உருவாக்க முயற்சித்த 7 பேரை அம்மாநில போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும், கைது செய்யப்பட்டவர்கள் மீது 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.