மதபோதகரை கொலை செய்த கொலையாளியை அரைமணி நேரத்தில் கைது செய்த திருவள்ளூர் போலீஸ்

Admin

திருவள்ளூரில் பிரார்த்தனைக் கூடத்திற்குள் மதபோதகரை கொலை செய்த இளைஞரை அரை மணி நேரத்திற்குள் துரிதமாகச் செயல்பட்டு கைது செய்துள்ளனர் திருவள்ளூர் காவல்துறையினர்.

திருவள்ளூர் : பட்டாபிராம் வள்ளலார் நகரில் உள்ள கிறிஸ்தவ பிரார்த்தனைக் கூடத்தில் 62 வயதான ஈனோஷ் கடந்த சில ஆண்டுகளாக ஊழியம் செய்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று தாம்பரம் அடுத்த இரும்புலியூர் நிகழ்ச்சிக்கு செல்ல ஆயத்தமாகியுள்ளார். அப்போது, 20 வயதான மோசஸ், கஞ்சா போதையில் அங்கு வந்துள்ளார். இதைக் கண்ட ஈனோஷ் அவரை கண்டித்துள்ளார்.

பின்னர், வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரத்தில் மோசஸ் அங்குள்ள சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து ஈனோஷை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த பட்டாபிராம் காவல்துறையினர், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மோசஸ் கொலை செய்தது தெரியவந்தது.

அத்துடன், எதுவும் நடக்காதது போல், தாம்பரத்தில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்றிருந்த அவரை, காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

நமது குடியுரிமை நிருபர்கள்


திரு. J. மில்டன்
மற்றும்

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தூத்துக்குடியில் கொலை முயற்சியில் ஈடுபட்டவருக்கு குண்டாஸ்.

74 தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அய்யனார் காலனி பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். இவரை 10.02.2020 அன்று புதுக்கோட்டை சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் அருகே பாளையங்கோட்டை […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami