Read Time1 Minute, 0 Second
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு மெச்சதகு விருது மற்றும் ஊக்கப்பரிசு வழங்கும் நிகழ்ச்சி எஸ்.பி அலுவலகத்தில் நடந்தது. காவல் கண்காணிப்பாளர் திரு. ஜெயக்குமார் தலைமை தாங்கி விருதுகளை வழங்கினார்.
விக்கிரவாண்டி தலைமை காவலர் செந்தில்குமார் அரசு பேருந்தில் பயணி ஒருவர் தவறவிட்டு சென்ற ரூ.2.40 லட்சத்தை மீட்டு ஒப்படைத்ததை வெகுவாக பாரட்டி சான்றிதழ் மற்றும் ஊக்கப்பரிசு வழங்கினார். இவர் பல சமூக சேவை செய்பவர் என்பது மேலும் சிறப்பு.
விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.சதீஸ் குமார்