பெண் சிசு கொலை, ஆணவக் கொலை, பெண்களுக்கெதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், மதுரை மாவட்ட SP எச்சரிக்கை

Admin
0 0
Read Time2 Minute, 0 Second

மதுரை : மதுரை மாவட்டத்தில் பெண் சிசு கொலை, ஆணவக் கொலை, பெண்களுக்கெதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ. மணிவண்ணன், இ.கா.ப அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.

மேலும், பெற்றோர்கள் குடும்ப சூழ்நிலையின் காரணமாக தங்களுக்கு பிறந்த பெண் குழந்தைகளை வளர்க்க இயலாத சூழ்நிலையின் போது தமிழக அரசின் சார்பில் தொட்டில் குழந்தைகள் திட்டம் என்ற சிறப்பான திட்டத்தினை அரசு மருத்துவமனைகளில் செயல்படுத்தி வருகின்றது. மேலும், தமிழக அரசு குழந்தைகள் நல அமைப்பு என்ற அமைப்பினை ஏற்படுத்தி பல்வேறு விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருவதோடு மட்டுமல்லாமல் காப்பகங்கள் அரசு, தனியார் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்போடு பல குழந்தைகள் நல காப்பகங்கள் மதுரை மாவட்டத்தில் செயல்பட்டு வருகின்றன, அவர்களை தொடர்பு கொண்டால் அவர்கள் பெண் குழந்தைகள் காப்பகத்தில் வளர்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.

எனவே பொது மக்களில் எவரும் பெண் சிசுக்கொலை குற்றச்செயலில் ஈடுபடக் கூடாது என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன், இ.கா.ப. அவர்கள் கடுமையாக அறிவுறுத்தியுள்ளார்கள்.

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

நாகப்பட்டினம் மாவட்ட SP தலைமையில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்

135 நாகப்பட்டினம் : சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami