தமிழக காவல் துறைக்கு சுமார் 100 கோடி ரூபாய்க்கு வழங்கப்பட்ட 2271 வாகனங்களை முதலமைச்சர் வழங்கினார்

Admin

சென்னை : சட்ட ஒழுங்கு பராமரிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு 1506 இருசக்கர வாகனங்கள் 31 ஸ்கார்பியோ கார்கள், 510 பொலிரோ கார்கள், 50 வேன்கள், 100 சிற்றுந்துகள், 20 பேருந்துகள், 54 லாரிகள் என மொத்தம் 2271 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. தலைமைச் செயலகத்தில் 06.03.2020 ம் தேதி நடைபெற்ற விழாவில் அவற்றை  ஒப்படைக்கும் அடையாளமாக 41 வாகனங்களை மாண்புமிகு முதலமைச்சர் திரு. எடப்பாடி K.பழனிச்சாமி அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் விழாவிற்கு வந்த முதலமைச்சருக்கு உள்துறை செயலாளர் திரு.S.K. பிரபாகர் IAS அவர்கள் மற்றும் தமிழ்நாடு காவல் துறை இயக்குனர் திரு.J.K.திரிபாதி IPS., அவர்கள், சென்னை காவல் ஆணையர் திரு. A.K. விஸ்வநாதன் IPS., அவர்கள் மற்றும் கூடுதல் காவல் இயக்குனர் திருமதி.சீமா அகர்வால் IPS., அவர்கள் புத்தகங்களை வழங்கி வரவேற்றனர்.

விழாவில் மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு.ஓ .பன்னீர்செல்வம் அவர்கள் மற்றும் அமைச்சர் பெருமக்கள், காவல் உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

 

நமது குடியுரிமை நிருபர்


S. அதிசயராஜ்
சென்னை

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மதுரை தெற்குவாசல் தலைமை காவலருக்கு பதவி உயர்வு, காவல் அதிகாரி வாழ்த்து

95 மதுரை : மதுரை மாநகர் B5 தெற்குவாசல் காவல் நிலையத்தில் பணிபுரியும் திரு. இருதயராஜ் அவர்கள் தலைமை காவலர் பணிபுரிந்து சிறப்பு சார்பு ஆய்வாளாராக பதவி […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami