திருட்டு வழக்கில் குற்றவாளியை பிடிக்க திறம்பட செயல்பட்ட காவல்துறையினருக்கு பாராட்டு

Admin

கோவை: கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் கடந்த 2009ஆம் வருடம் சுமார் 137 பவுன் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருட்டு போனது. இது சம்பந்தமாக குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை மேற்கொண்டு, 5 குற்றவாளிகளை கைது செய்து, துடியலூர், ஓசூர் ஆகிய காவல்நிலைய குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 237 பவுன் தங்க நகை, 4 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ஒரு கார் ஆகியவற்றை கைப்பற்றி உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேற்படி குற்றவாளிகளை பிடிக்க சிறப்பாக செயல்பட்ட துடியலூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. பால முரளி சுந்தரம் உட்பட 36 காவல்துறையினருக்கு மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் திரு.பெரியய்யா ஐபிஎஸ் அவர்கள் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

 

கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்


A. கோகுல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காவல் நிலையங்களுக்கு சென்னை காவல் ஆணையர் சுற்றறிக்கை

530 சென்னை: மார்ச் 9 முதல் சட்டப்பேரவை கூட்டம் தொடங்குவதை ஒட்டி காவல் நிலையங்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அறிவுரை வழங்கியுள்ளார். […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452