கோப்பை மற்றும் தங்கம் வென்ற தமிழ்நாடு காவல் குதிரைப்படை வீரர்கள், முதலமைச்சர் வாழ்த்து

Admin

சென்னை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி. கே. பழனிசாமி அவர்களை தலைமைச் செயலகத்தில் சென்னை பெருநகர காவல் குதிரைப்படை வீரர்கள் சந்தித்து, அரியானா மாநிலத்தில் நடைபெற்ற 30 வது அகில இந்திய அளவிலான குதிரை ஏற்ற விளையாட்டுப் போட்டியில், முதன் முறையாக தமிழ்நாடு காவல் துறை சார்பாக கலந்துகொண்டு, வென்ற ஒரு சூழல் கோப்பை, ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கல பரிசுகளை காண்பித்து வாழ்த்துப் பெற்றார்கள். உடன் தலைமை செயலாளர் திரு.சண்முகம், IAS,  உள் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.எஸ். கே. பிரபாகர், IAS,  காவல்துறை தலைமை இயக்குனர் திரு. ஜே. கே. திரிபாதி, IPS, சென்னை பெருநகர காவல்துறை ஆணையாளர் முனைவர் ஏ. கே. விஸ்வநாதன், IPS ஆகியோர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பொன்னேரி அருகே புறநகர் ரெயில்களில் நடைபெறும், கொள்ளையை தடுக்க ரயில்வே போலீசார் நடவடிக்கை பயணிகளிடம் விழிப்புணர்வு பரப்புரை

66 திருவள்ளூர் : சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி மார்க்கமாக செல்லும் புறநகர் பயணிகள் ரெயில்களில் தற்போது குற்றச்செயல்கள் அதிகரித்து வருகிறது. பயணிகளிடம் நட்புடன் […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami