பாண்டி விஷ சாராயம் கடத்திய நபர் கைது மற்றும் இருகுசக்கர வாகனம் பறிமுதல்

Admin

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் மது குற்றங்களை தடுக்கும் பொருட்டு நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்களின் உத்தரவின் பேரில் நாகப்பட்டினம் நகர காவல்துறையினர் கோட்டைவாசல் பெட்ரோல் பங்கு அருகே, வாகன சோதனை மேற்கொண்டபோது, அவ்வழியே வந்த ஒரு இருகுசக்கர வாகனத்தை சோதனை செய்ததில் தேனி அல்லிநகரத்தை சேர்ந்த மாணிக்கம் மகன் சோனிராஜா( 29) என்ற நபர் PY01AK4470 இந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்த போது அதில் 150 லிட்டர் பாண்டி விஷ சாராயம் இருந்தது கைப்பற்றப்பட்டது.

மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் குற்றவாளி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். மேலும் இது போன்ற குற்றங்கள் நடைபெற வண்ணம் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சிவகங்கை நகர் போக்குவரத்து ஆய்வாளர் தலைமையில் சாலை பாதுகாப்பு விதிகள் குறித்த விழிப்புணர்வு

102 சிவகங்கை: சிவகங்கை நகர் போக்குவரத்து ஆய்வாளர் திரு. மணி அவர்கள் மற்றும் முன்னாள் தாசில்தார் திரு. தங்கவேல் ஆகியோர் சாலை பாதுகாப்பு விதிகள் குறித்த விழிப்புணர்வு […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami