மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள்தண்டனை

Admin
0 0
Read Time1 Minute, 31 Second

இராமநாதபுரம் :  இராமநாதபுரம் மாவட்டம் கீழத்தூவல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருங்காலகுறிச்சியைச் சேர்ந்த பஞ்சவர்ணம் என்பவருக்கும் அவரது மனைவி தவசியம்மாள் என்பவருக்கும் இடையே 05.07.2005-ம் தேதி ஏற்பட்ட குடும்பப் பிரச்சினையில் பஞ்சவர்ணம் அவரது மனைவி தவசியம்மாவை கையால் கழுத்தை நெறித்து கொலை செய்து தடயத்தை மறைக்க அவரது உடலை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்ததையடுத்து கீழத்தூவல் காவல் நிலைய குற்ற எண். u/s 302 IPC & 201 IPC-ன் பிரகாரம் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கின் விசாரணை முடிந்து இன்று 26.02.2020-ம் தேதி மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி திரு.சண்முகசுந்தரம் அவர்கள் மேற்படி எதிரியான பஞ்சவர்ணம் என்பவருக்கு கொலை செய்த குற்றத்திற்கு ஆயுள்தண்டனை மற்றும் 5,000/- ரூபாய் மேலும், தடையத்தை மறைத்த குற்றத்திற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 2,000/-ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார்கள்.

 

 

நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சிவகங்கையில் முன்விரோதம் காரணமாக கொலை, 3 நபர்கள் கைது

86 சிவகங்கை: சிவகங்கையில்  பழையனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலராங்கியம் விவசாய நிலப்பகுதியில் 07.02.2020 அன்று 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami