3 கோடி ரூபாய் வங்கிக் கணக்கு மோசடி  செய்த வட மாநில கும்பலை கைது செய்த தமிழக காவல்துறையினர்

Admin

தமிழகத்தை சேர்ந்தவர்களின் வங்கிக் கணக்கு ரகசியக் குறியீட்டு எண்களை பெற்று 3 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்த வட மாநில கும்பலை தமிழக தனிப்படை காவல்துறையினர் டெல்லியில் வைத்து கைது செய்துள்ளனர். மேலும் முக்கிய குற்றவாளியை தேடிவருகின்றனர்.

முதியவர்கள் மற்றும் பெண்களை குறிவைத்து வங்கியின் மேலாளர் போல பேசுவது தான் மோசடிக் கும்பலின் வழக்கம். குறைந்த வட்டியில் கடன், வங்கிக் கணக்குக்கு ரிவார்டு பாய்ண்டுகள் கிடைத்து, வங்கிக் கணக்கு, டெபிட் கார்டு, கிரெடிட் கார்ட் முடக்கப்பட்டதாகக் கூறி, இந்தக் கும்பல் ஏ.டி.எம். கார்டு விவரங்களை பெற்றது தெரியவந்துள்ளது.

ஏ.டி.எம். கார்டின் 16 இலக்க எண், நிறைவுத் தேதி, சிவிவி எனப்படும் பாதுகாப்புக் குறியீட்டு எண் உள்ளிட்ட விவரங்களை பெற்று சுமார் 3 கோடி ரூபாய் அளவிற்கு பலரிடம் இந்த கும்பல் மோசடி செய்துள்ளது.

கார்டு விவரங்களைக் கொண்டு கூகுள் பே, மோபிக் விக், பேடிஎம் உள்ளிட்ட பணப்பரிவர்த்தனை செயலிகளில் கணக்குகளை தொடங்கி இந்தக் கும்பல் மோசடி செய்தது தெரியவந்தது.

இந்த கும்பல் செல்போன் எண்களை மாற்றி பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதால் அவர்களைப் பிடிப்பதில் காவல்துறையினருக்கு சிரமம் ஏற்பட்டது. எனினும் அந்தக் கும்பல் அடிக்கடி மாற்றும் செல்போன் எண்களை தொழில் நுட்ப உதவியுடன் தொடர்ந்து கண்காணித்து வந்த காவல்துறையினர், அவர்கள் டெல்லியில் இருந்து மோசடியை அரங்கேற்றுவதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து டெல்லியில் 4 நாட்கள் முகாமிட்ட தமிழக தனிப்படை காவல்துறையினர், தீவிர கண்காணிப்பு, விசாரணை உள்ளிட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் தீபக் குமார், தேவ்குமார், வில்சன் என்ற 3 பேரை கைது செய்து விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பீகார், மேற்கு வங்கம், ராஜஸ்தான், ஜார்கண்ட், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் தலைமறைவாகியுள்ள சிவசக்தி, ஜெயராஜ், ஜிப்ரேல், நிகேல் உள்ளிட்ட முக்கிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர். தமிழகம் மட்டுமன்றி நாட்டின் பல்வேறு இடங்களைச் சேர்ந்தவர்களிடமும் இந்தக் கும்பல் மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறுவோரிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என காவல்துறையினர் ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளனர். இது குறித்து விழிப்புணர்வு குறும்படங்களும் அவ்வப்போது காவல்துறையினரால் வெளியிடப்படுகின்றன. பெண்கள் மற்றும் முதியவர்கள் வங்கி கணக்கு உள்ளிட்டவற்றில் மிகுந்த கவனமாக இருக்கு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

குழந்தை தொழிலாளர் பேரணி, திருச்சி குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் தலைமை

80 திருச்சி : திருச்சி மாவட்டம் குழுமணி ஊராட்சியில் தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் மூலம் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு குழந்தை தொழிலாளர் […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami