பெண் காவலரை டிக்-டாக்கில் கேலி செய்தவர் சிறையில் அடைப்பு

Admin

திருச்சி : திருச்சி மாவட்டம், லால்குடி கீழவீதி மகாமாரியம்மன் கோவில், பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு அரசு அனுமதி, பெற்று ஜல்லிக்கட்டு விழா லால்குடி கீழவீதியில் 16.02.2020 ம் தேதி ஞாயிற்று கிழமை காலை 09.00 மணிக்கு துவங்கியது. மேற்கண்ட ஜல்லிக்கட்டு விழா பாதுகாப்பு பணிக்காக திருச்சி மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் இருந்தும் போலீசார் அழைக்கப்பட்டிருந்தனர்.

மேற்கண்ட ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பார்ப்பதற்காக வந்திருந்த சுபாஷ் கண்ணன், (19)   என்பவர் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு பணிக்கு வந்திருந்த பெண் காவலர்களை அவதூறாக சித்தரித்து காவல்துறைக்கு கலங்கம் ஏற்படுத்தும் விதமாக, டிக்-டாக் வீடியோ பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த பெண் காவலர் லால்குடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் லால்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஜியாவுல் ஹக், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் சமயபுரம் காவல் ஆய்வாளர் திரு. மதன் அவர்களின் தலைமையிலான தனிப்படையினர் இன்று 18.02.2020 ம் தேதி மதுரை சென்று மேற்கண்ட சுபாஷ் கண்ணன் என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

 

போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்

Y.பாலகுமரன்
திருச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சிவகங்கை மாவட்ட ஊர்க்காவல் படையில் சிறப்பாக பணியாற்றிய காவலருக்கு விருது

72 சிவகங்கை : சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட ஊர்க்காவல் படையில் சிறப்பாக பணியாற்றிய குருநாதனுக்கு சேவை செம்மல் விருது […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami