Read Time1 Minute, 15 Second
சிவகங்கை : 31 வது சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட காவல் துறை சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி திருப்பத்தூர் வாரச்சந்தை பகுதியில் நடைபெற்றது.
விழிப்புணர்வில் திருப்பத்தூர் போக்குவரத்து சார்பு ஆய்வாளர் திரு. மலைச்சாமி அவர்கள் சாலை பாதுகாப்பு விதிகள் குறித்தும், ஓட்டுனர்கள் வாகனங்களை இயக்கும்போது பொறுமையை கடைபிடிக்க வேண்டும் எனவும், சூழ்நிலைக்கு ஏற்றவாறு வாகனங்களை இயக்க தெரிந்திருந்தால் விபத்தினை தவிர்க்க முடியும் எனவும், தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிந்து வாகனங்களை இயக்க வேண்டும் எனவும், இந்நிகழ்ச்சியில் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் மற்றும் ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர்.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்