123
Read Time1 Minute, 4 Second
தூத்துக்குடி : தூத்துக்குடி மத்திய பாகம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் திரு. சங்கர் தலைமையிலான போலீசார் 08.02.2020 அன்று தூத்துக்குடி WGC ரோடு பகுதியில் உள்ள பெட்டிக் கடையில் சோதனை செய்தபோது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சங்கர் u/s. 24(1) COTP Actன் கீழ் வழக்கு பதிவு செய்து கடையின் உரிமையாளரான திருமணி(58) என்பவரை கைது செய்தார். மேலும் அவரிடமிருந்த புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
நமது குடியுரிமை நிருபர்
G. மதன் டேனியல்
தூத்துக்குடி