அரக்கோணம் மோசூர் பள்ளி காவல் படை மாணவர்களுடன் உரையாடிய அரக்கோணம் காவல் ஆய்வாளர்

Admin
0 0
Read Time2 Minute, 4 Second

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில்  மோசூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் மாணவர் காவல் படை(SPC) யை சேர்ந்த மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி அரக்கோணம் காவல் நிலையத்தில் நடைபெற்றது. இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மயில்வாகனன் அவர்கள் உத்தவின்படி,  அரக்கோணம் காவல் ஆய்வாளர் திரு.முத்து ராமலிங்கம், காவல் உதவி ஆய்வாளர் திரு.தேவபிரகாசம் ஆகியோர்  மாணவர்களுக்கு பயிற்சி மற்றும் அறிவுரை வழங்கினார்கள். மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய அரக்கோணம் காவல் ஆய்வாளர் திரு.முத்து ராமலிங்கம் அவர்கள், சாலை விதிகளை மதிக்க வேண்டும், வீட்டில் உள்ள பெரியவர்களுக்கும் சாலை விதிகளை கற்றுக் கொடுக்க வேண்டும், அவர்களை கட்டாயம் ஹெல்மெட் அணிய வலியுறுத்த வேண்டும், காவல் துறை உங்கள் நண்பன், குற்றங்கங்கள் நடைபெறுவதை கண்டால் காவல்துறையினரிடம் உடனே தகவல் தெரிவிக்க வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகளை வழங்கினார்.

மாணவ, மாணவிகளும் உற்சாகத்துடன் கலந்து கொண்டு காவல்துறையினருடன் உரையாடினர். இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் திரு.எபிநேசர், நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா மாநில தலைவர் திரு.பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பெற்றோரை பிரிந்த மாணவரை குடும்பத்தினருடன் சேர்த்து வைத்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்

103 திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பழனியில் கூடியுள்ளனர். திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami