தான் பாடுபட்டு சேர்த்து காணாமல்போன பணம் கிடைத்ததால் காவல்துறையினருக்கு விவசாயி கண்ணீர் மல்க நன்றிகூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Admin
0 0
Read Time1 Minute, 53 Second

தேனி : ஆட்டோவில் தவறவிட்ட 6 லட்சம், உரியவரிடம் ஒப்படைத்த தேனி மாவட்ட காவல்துறையினர். தேனிமாவட்டம் ஆண்டிபட்டியருகே மாயாண்டிபட்டியை சேர்ந்த விவசாயி அம்மாவாசை. இவர் ஒருபையில் 74 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் 5 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கான வைப்புத்தொகை சான்றுகளை எடுத்துக்கொண்டு ஆட்டோவில் தனது கிராமத்திலிருந்து ஆண்டிபட்டிக்கு வந்த போது பையை ஆட்டோவிலேயே மறந்து வைத்துவிட்டு சென்றதாக அம்மாவாசை ஆண்டிபட்டி காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் திரு.சரவண தேவேந்திரன் அவர்கள் தலைமையிலான போலீசார்கள் ஆண்டிபட்டி நகரில் ஆட்டோவை கண்டுபிடிக்க சிசிடிவி பதிவு காட்சிகளை ஆய்வுசெய்து தீவிரவிசாரணை மேற்கொண்டதையடுத்து ஆட்டோ ஓட்டுனர் அழகர்சாமி என்பவரின் ஆட்டோவில் இருந்த 6 லட்சத்து 4 ஆயிரம் மதிப்புள்ள பணம் மற்றும் வைப்புத்தொகை பத்திரங்களை கண்டுபிடித்து காவல் ஆய்வாளர் திரு.சரவண தேவேந்திரன் அவர்கள் தலைமையில் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினருக்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய் சரன் தேஜஸ்வி.இ.கா.ப., அவர்கள் பாராட்டுகளை தெரிவித்தார்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

176 செங்கல்பட்டு : இன்று செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாமல்லன் சிலை அருகே மாமல்லபுரம் காவல் துறை மற்றும் AVIT கல்லூரி மாணவர்கள் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami