36 சவரன் தங்க நகைகள் திருடிய பெண் கைது

Admin
Read Time2 Minute, 24 Second

மதுரை : மதுரை மாநகர் ஜோன்ஸ்புரம், பசுமலையில் வசிக்கும் இராஜமாணிக்கம் மகன் பால்ஜாம்ராஜ் என்பவர் தனது வீட்டில் இருந்த 36 சவரன் தங்க நகைகளை யாரோ திருடிவிட்டதாக V1- திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை பெற்று திருட்டு வழக்கு பதிவு செய்து, விசாரணை செய்ததில்
மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது பால்ஜாம்ராஜ் வீட்டில் வீட்டு வேலை பார்த்து வந்த சுப்புலட்சுமி, க/பெ சந்தானதுரை, பசுமலை, மதுரை என தெரியவந்தது எனவே அவரை இன்று V1- திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் திருமதி. மதனகலா அவர்கள் சுப்புலட்சுமியை கைது செய்து அவரிடமிருந்து 36 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினார்.

மதுரை மாநகர பொதுமக்கள் அனைவருக்கும் காவல்துறையின் முக்கிய வேண்டுகோள்

*தங்களது வீடுகளில் வேலை செய்து வரும் பணிப்பெண்களின் முழு விபரங்களை முதலில் நன்கு அறிந்து கொள்ளவேண்டும்.

*அவர்களின் நடவடிக்கைகளை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும்.

*அவர்கள் இதற்கு முன்பு அவர்கள் வேலை செய்த இடத்தில் அவர்களைப் பற்றி முழுமையாக விசாரித்து அதன் பின்னர் வேலைக்கு நியமிக்கவேண்டும்.

* முன்பின் தெரியாத நபர்களை தயவுசெய்து வீட்டு வேலைக்கு நியமிக்க வேண்டாம்.

*விலை உயர்ந்த பொருட்கள், பணம் போன்றவை தங்களது வீடுகளில் இருக்குமானால் கட்டாயம் தங்களது வீடுகளில் CCTV கேமிரா பொருத்தப்பட்டு, வீட்டு வேலை செய்பவரின் நடவடிக்கைகளை அன்றாடம் கண்காணிக்கப்பட வேண்டும்.

 

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பழனிக்கு வரும் பக்தர்களுக்கு திண்டுக்கல் காவல்துறையினர் சார்பில் ஒளிரும் பட்டைகள் விநியோகம்

102 திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி தைப்பூச திருவிழாவையொட்டி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு திண்டுக்கல் நகர காவல் உதவி கண்காணிப்பாளர் திரு.மணிமாறன் அவர்கள் மற்றும் திண்டுக்கல் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami