Read Time1 Minute, 0 Second
தேனி : தேனி மாவட்டம், கூடலூர் வடக்கு காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகள் விற்பதாக தனிப்பிரிவுக்கு கிடைத்த தகவலின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் திரு.கணேசன், தலைமை காவலர் திரு.திருப்பதி (தனிப்பிரிவு), காவலர் திரு.பிரசாத் ஆகியோர்கள் விரைந்து சென்று லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்ட கணேசன்(42) என்பவரை கைது செய்து பிரிவு 5 r/w 7(3) TNLR ACT-ன் வழக்கு பதிவு செய்து அவரிடமிருந்து ₹5430/- மதிப்புள்ள 181 லாட்டரி சீட்டுகள் மற்றும் லாட்டரி சீட்டுகள் விற்ற பணம் ₹4500/- பறிமுதல் செய்தனர்.