கொலை வழக்கில் குற்றவாளியை விரைந்து கைது செய்த காவல் அதிகாரிகளுக்கு காவல் ஆணையர் பாராட்டு

Admin

சென்னை :  முத்தாபுதுப்பேட்டை அருகில் டோல்கேட் காவலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியை விரைந்து கைது செய்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் , குற்றவாளியை பிடிக்க உதவிய நபரையும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார் .

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை சேர்ந்த நரேஷ்குமார், வ/21, த/பெ.கோவிந்தராஜ் என்பவர் 24.01.2020 அன்று தனது Eicher சரக்கு வாகனத்தை பாலவேடு பகுதியில் புதிதாக கட்டி வரும் டோல்கேட் அருகில் நிறுத்தி விட்டு ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த போது, அதிகாலை சுமார் 1.45 மணியளவில் அவ்வழியே இருசக்கர வாகனத்தில்(Pulsar) வந்த இரண்டு நபர்கள் மேற்படி நரேஷ்குமாரின் வாகனத்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திவிட்டு அவரை மிரட்டி 1 செல்போன் மற்றும் ரூ.4,000/- பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர்.

நரேஷ்குமார் சத்தம்போட்டு கொண்டு குற்றவாளிகளை துரத்திச்சென்ற போது அருகில் இருந்த காவலாளி வெங்கடேசன், வ/65, த/பெ.கண்ணையன், 16 வது குறுக்கு தெரு, பிரகாஷ்நகர், திருநின்றவூர் என்பவரும் சேர்ந்து குற்றவாளிகளை பிடிக்க முற்பட்ட போது இரண்டு குற்றவாளிகளும், காவலாளி வெங்கடேசனை சரமாரியாக இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு அவரிடமிருந்து 1 செல்போனை பறித்துள்ளனர். மேலும் அங்கிருந்த மற்றொரு லாரி ஒட்டுநரான திரு.சிவக்குமார் என்பவரையும் இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு அவரிடமிருந்தும் 1 செல்போன் மற்றும் ரூ.300/- பறித்துக்கொண்டு தப்பிச்சென்றுள்ளனர். தாக்குதலில் பலத்த காயமடைந்த காவலாளி வெங்கடேசன் சம்பவ இடத்திலே இறந்து விட்டார். இது குறித்து நரேஷ்குமார் T-8 முத்தாபுதுப்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளரின் உத்தரவின் பேரில் மேற்படி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய பட்டாபிராம் சரக உதவி ஆணையாளர் திரு.M.வெங்கடேசன் அவர்கள் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை செய்து மேற்படி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட சுரேஷ் (19), த/பெ.வேணுகோபால், எண்.3/789, திலகர் சாலை, பவானி நகர், திருநின்றவூர் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பியோடிய மற்றொரு குற்றவாளியை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட சுரேஷ் மீது ஏற்கனவே திருநின்றவூர் காவல் நிலையத்தில் வழிப்பறி வழக்கு உள்ளது தெரியவந்தது.

மேற்படி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை விரைந்து கைது செய்த பட்டாபிராம் சரக உதவி ஆணையாளர் திரு.M.வெங்கடேசன் தலைமையிலான காவல் குழுவினர் T-8 முத்தாபுதுப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் திரு.B.ஜெயசங்கர் , T-9 பட்டாபிராம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.S. ஜெய்கிருஷ்ணன், T-10 திருமுல்லைவாயில் காவல் நிலைய ஆய்வாளர் திரு.R.புருஷோத்தமன், T-11 திருநின்றவூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.S.குணசேகரன் , T-8 முத்தாபுதுப்பேட்டை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.S.ராமச்சந்திரன், T-8 முத்தாபுதுப்பேட்டை காவல் நிலைய தலைமைக்காவலர்கள் திரு.S.V.சிவக்குமார் (தா.கா.43876), திரு.A.சங்கர் (தா.கா.35108), T-6 ஆவடி காவல் நிலைய தலைமைக்காவலர் திரு.S.சசிகுமார் (தா.கா.35428), T-7 ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமைக்காவலர் திரு.R.நிர்மல்குமார் (தா.கா.47334), T-12 பூந்தமல்லி காவல் நிலைய தலைமைக்காவலர் திரு.S.சரவணன் (தா.கா.35603), T-10 திருமுல்லைவாயில் காவல் நிலைய தலைமைக்காவலர் திரு.P.முத்துகுமார் (தா.கா.25976), T-8 முத்தாபுதுப்பேட்டை காவல் நிலைய ஊர்க்காவல் படை வீரர் திரு.R..பூபாலன் (HG1574) ,T-10 திருமுல்லைவாயில் காவல் நிலைய ஊர்க்காவல் படை வீரர் R.பிரேம்குமார் (HG 1605) ஆகியோர் மற்றும் குற்றவாளியை பிடிக்க உதவிய Vodafone Nodal Officer திரு.D.கார்த்திக் ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் இன்று (25.01.2020) நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

 

 

 

சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்


அப்துல் ஹாபிஸ்
வண்ணாரப்பேட்டை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

விழுப்புரத்தில் மதுபானங்களை கடத்திய இருவர் கைது

114 விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சசிகுமார், திரு.விநாயகம் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது பாண்டிச்சேரி மதுபானங்களை […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami