Read Time54 Second
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தோமையார்புரம் அருகே ( 17.01.2020) ஆதரவின்றி சுற்றித் திரிந்த நபர் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதையடுத்து உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில் தாலுகா காவல் நிலைய தலைமை காவலர் 1680 திரு.வனராஜன் அவர்கள் தன்னுடைய சொந்த செலவில் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தார். காவலரின் மனிதநேய செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
திண்டுக்கல்லில் இருந்து
நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா