மூன்றாம் கண்களான சிசிடிவி கேமராவில் சிக்கிய வடமாநில இரயில் கொள்ளையர்கள்

Admin

சென்னை : சென்னை சென்ட்ரல் உள்ளிட்ட இரயில் நிலையங்களில் பயணிகளின் தங்க நகைகள் திருடு போவதாக வந்த புகாரின் பேரில் சென்னை இருப்புப்பாதை காவல் கண்காணிப்பாளர் திரு.மகேஷ்வரன் இ.கா.ப அவர்கள் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

அப்போது 06.01.2020-ம் தேதியன்று சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் பயணிகளின் பைகளை நோட்டமிட்டு கொண்டு இருந்த நபர்களை சிசிடிவி மூலம் கண்டறிந்த போலீசார் அவர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்ததில் ஹரியானா மற்றும் டில்லி மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும் இரயில் பயணிகளிடத்தில் பணம் மற்றும் நகைகள் திருடும் கும்பல் என்பதும் தெரியவந்தது.

அதனடிபடையில் குற்றவாளிகளை கைது செய்து அவர்களிடமிருந்து 25 சவரன் மதிப்பிலான தங்க கட்டியை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

நெல்லை சந்திப்பு பகுதியில் கஞ்சா விற்றவர் கைது, 27 கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்

54 நெல்லை : நெல்லை சந்திப்பு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி.லட்சுமி அவர்கள் மற்றும் போலீசார் 16-01-2020-ம் தேதியன்று, உடையார்ப்பட்டி சந்திப்பு பகுதியில் ரோந்து சென்ற […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami