120
Read Time42 Second
கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் 07.01.2020 அன்று அஞ்சுகிராமம் பகுதியில் பிச்சை எடுத்து கொண்டிருந்த பெரியவர் நோய்வாய்ப்பட்டு தீடிரென இறந்தார். அனாதையான அவருக்கு யாரும் இல்லாத நிலையில் அஞ்சுகிராமம் காவல் நிலைய தலைமை காவலர் திரு.லிங்கேஷ் அவர்கள் தனது சொந்த செலவில் உரிய முறையில் மரியாதை செய்து நல்லடக்கம் செய்தார். இதை அந்த பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.