கோவையில் ஆபாச படம் பதிவேற்றம் செய்த அசாம் இளைஞர் கைது

Admin

கோவை : கோவை மாவட்டம் சமூக ஊடக பிரிவில் சமூக வலைதளங்களை கண்காணித்தபோது ரென்டத பாசுமாடரி என்ற நபர் முகநூல் பக்கத்தில் சிறார்களின் ஆபாச படங்களை பதிவிட்டு இருப்பது தெரியவந்தது. மேற்படி நபர் பொள்ளாச்சியில் இருந்து ஆபாச படங்களை பதிவேற்றம் செய்தது, கண்டுபிடிக்கப்பட்டு, சமூக ஊடகப் பிரிவில் இருந்து, பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில்  புகார் அளிக்கப்பட்டது.

மேற்படி புகாரின் பேரில் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேற்படி குற்றவாளியை பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் உள்ள. தனியார் டைல்ஸ் கடையில் வேலை பார்த்து வந்த, அவரை கைது செய்து அவனிடமிருந்த தொலைபேசியை ஆய்வு செய்தபோது, அந்த கைப்பேசியில் சிறுவர்களின் ஆபாச படங்கள் உள்ளிட்ட பல ஆபாச படங்கள் உள்ளது.

மேலும் அந்த நபரை விசாரித்த போது, தனது சொந்த ஊர் அசாம் மாநிலம் என்றும், தனது தந்தை பெயர் பெர்கோ பாசுமாடரி என்றும், தான் அசாம் மாநிலத்தில் இருந்து, வந்து இங்கே தங்கி டைல்ஸ் கடையில் வேலை பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளான்.

எனக்கு ஆபாச படம் பார்க்கும் பழக்கம் இருந்ததாகவும், தான் பார்க்கும் படங்களை பதிவிறக்கம் செய்து, அதை முகநூலில் பதிவேற்றம் செய்தும், மேலும் தனது நண்பர்களுக்கும் தனிப்பட்ட முறையிலும், பேஸ்புக் மெசஞ்சர் மூலம் அனுப்பி வைத்ததை ஒப்புக்கொண்டார். மேற்படி நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

மேலும் இவ்வாறான குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்திருப்போர் மற்றும் சமூக வலைத்தளங்களில் பதிவுகள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் மேற்படி நபர்களும் சட்டப்படியான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுஜித் குமார் ஐபிஎஸ் அவர்கள் எச்சரித்துள்ளார்.

 

கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்


A. கோகுல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

முதல்வரிடம் வாங்கிய பதக்கத்திற்காக, ஆணையரிடம் வாழ்த்து பெற்ற காவலர்

93 கோவை : கோவை மாநகர காவல் புகைப்பட கலைஞர் ஐய்யாலுசாமி,  முதல்வரிடம் வாங்கிய பதக்கத்தை மரியாதை நிமித்தமாக கோவை மாநகர காவல் ஆணையர் திரு.சுமித் சரண், […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami