Admin
0 0
Read Time1 Minute, 49 Second

தஞ்சை : தஞ்சாவூரில் இருக்கும் வங்கிகளில் இருந்து சென்னை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்பட்ட பணத்தில் கள்ள நோட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாவட்டம் முழுவதும் கள்ளநோட்டு புழக்கம் குறித்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை தொடங்கி இருக்கின்றனர். தஞ்சையில் இருக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்களில் ஒன்றில் இருந்தும் கும்பகோணத்தில் உள்ள 2 வங்கிக் கிளைகளில் இருந்தும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சென்னையில் இருக்கும் ரிசர்வ் வங்கி கிளைக்கு பணம் அனுப்பப்பட்டது.

சென்னை ரிசர்வ் வங்கி கிளையில் தமிழகத்தில் இருக்கும் வங்கிகளில் இருந்து பெறப்படும் பணத்தை அதிகாரிகள் ஆய்வு செய்வது வழக்கம். அதன்படி தஞ்சாவூர், கும்பகோணம் வங்கிகளில் இருந்து வந்த பணத்தை ஆய்வு செய்த போது அதில் 37 கள்ள நோட்டுகள் வந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து சென்னை ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாவட்டம் முழுவதும் கள்ளநோட்டு புழக்கம் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மனநலம் பாதிக்கப்பட்டவர்களை உறவினர்களிடம் ஒப்படைக்க “வாங்க வீட்டுக்கு போகலாம்” நிகழ்ச்சி

652 புதுக்கோட்டை :  புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் மாவட்ட காவல்துறை இணைந்து மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் ஆதரவற்றவர்களின் இருப்பிடத்தை கண்டுபிடிக்கும் பொருட்டு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami