2019 ஆண்டில் கோவை சரக காவல்துறையினரின் செயல்பாடு மிக மிக சிறப்பு !

Admin
0 0
Read Time8 Minute, 8 Second

கோவை : தமிழ்நாடு காவல்துறையில் மேற்கு மண்டலத்தில் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ளடக்கி கோவை சரகம் இயங்கிவருகிறது. கோவை சரகத்தில் உள்ள நான்கு மாவட்டங்களிலும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில், குற்றங்களை தடுப்பதிலும், கண்டுபிடிப்பதிலும், வாகன விபத்தை குறைப்பதிலும், சாலை பாதுகாப்பு மேம்பாட்டிலும்,  இந்த ஆண்டு கோவை சரக காவல்துறையினரின் செயல்பாடு மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது.

இவ்வாண்டில் சரகத்தில் பதிவு செய்யப்பட்ட 116 கொலை வழக்குகளில் 113 கொலை வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் 23 கொலை வழக்குகளில் ஈடுபட்ட நபர்களுக்கு நீதிமன்றத்தின் மூலம் தண்டனை பெற்ற தரப்பட்டுள்ளது. அதில் ஒரு வழக்கில் மரண தண்டனையும், மற்ற வழக்குகளில், ஆயுள் தண்டனை போன்ற தண்டனைகள் பெற்று தரப்பட்டுள்ளது.

இவ்வாண்டில் சரகத்தில் பதிவுசெய்யப்பட்ட, 150 சங்கிலி பறிப்பு வழக்குகளில், 138 வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 488 சவரன் நகைகள் மீட்கப்பட்டு, உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டில் களவுபோன ரூபாய் 10.24 கோடி மதிப்புள்ள 1140 சவரன் நகைகள், இரண்டு சக்கர நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் வழக்கு சொத்துக்கள் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சம்பந்தமாக 13 பாலியல் கொடுமை வழக்குகளும், 195 குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அனைத்து வழக்குகளிலும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதில் இவ்வாண்டில் நீதிமன்றத்தால் 18 வழக்குகள் தண்டனைகள் முடிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு வழக்கில் மரண தண்டனையும், 5 வழக்கில் ஆயுள் தண்டனையும், மற்றும் மீதமுள்ள வழக்குகளில் ஏழு ஆண்டுகள் அல்லது அதற்கு நிகரான தண்டனை பெற்ற தரப்பட்டுள்ளது.

மேலும் இவ்வாண்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலில், ஈடுபட்ட 14 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் அவர்களுக்கு எதிராக நடைபெறும் துன்புறுத்தல் பற்றி தகவல் கொடுப்பதற்காக, நம் காவல் செயலி , Child Helpline, Child Protect Line செயல்பட்டுவருகிறது. கோவை  மட்டும் 60,499 பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

கோவை சரகத்தில் சென்ற ஆண்டில் 64 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இவ்வாண்டில் மொத்தம்  97 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். போக்கிரி 54, திருட்டு குற்றவாளிகள் 12, மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட 14 பேரும் அடங்குவார்கள்.

மேலும் இந்த ஆண்டில் கோயம்புத்தூரில் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் தீபக் என்பவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாண்டு கோவை சரகத்தில் வாகன விபத்தில் சதவிகிதம் சென்ற ஆண்டை விட 14 சதவீதம் குறைந்துள்ளது. சென்ற ஆண்டு 1427 நபர்கள் மோட்டார் வாகன விபத்தினால் இறக்க நேரிட்டது. வாகன விபத்தை தவிர்க்க வழங்கப்பட்ட அறிவுரை மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மூலம் மோட்டார் வாகன சட்டத்தை முறையாக நடைமுறைப் படுத்தி, விபத்தில் இறப்பவர்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டை விட, இந்த ஆண்டு 400 குறைக்கப்பட்டுள்ளது.

விபத்தினால் இறப்பு ஏற்படுவது 28 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. மோட்டார்வாகன விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுத்து, சம்பவ இடத்தில்  மின்னணு பணப் பரிமாற்ற முறையில், பணம் செலுத்துவதற்கு அனைத்து காவல் நிலையங்களுக்கும் 366 இயந்திரம் புதிதாக வழங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் இவ்வாண்டில் 2,85, 795 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, இரண்டு 2.43 கோடி அபராதம் அரசு வங்கி கணக்கில் நேரடியாக கட்டப்பட்டுள்ளது. மோட்டார் வாகன விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது சென்ற ஆண்டில் 5,08,865 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 6.41 கோடி வசூல் செய்யப்பட்டது.

இதுவே இவ்வாண்டில் 11,07,275  வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 10.9 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இவ்வாண்டில் சரகத்தில் மோட்டார் வாகன விதிமீறல்களில்,  ஈடுபட்ட 49,275 ஓட்டுநர்களின், ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மோட்டார் வாகன விபத்து சம்பந்தமாக ஓட்டுநர் மற்றும் பள்ளி மற்றும் கல்வி மாணவர்களுக்கு, 94758 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு உள்ளது. மேலும் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல், போலீசார் தீவிரமாக கண்காணித்து நடந்த குற்றங்களை சிறப்பாக கண்டுபிடித்தும், அவ்வப்போது நடைபெறும் போராட்டங்கள், திருவிழாக்கள் போன்ற நிகழ்வுகளின் போது, பொது மக்களுக்கு சிரமம் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

கோவை சங்கம் சார்பாக விபத்தில்லாத, சட்டம் ஒழுங்கு பிரச்சனை இல்லாத, குற்றங்கள் அற்ற, அமைதியான மகிழ்ச்சியான புத்தாண்டாக எல்லோருக்கும் அமைந்திட காவல் துறை சார்பாக புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

 

கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்


A. கோகுல்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மது பாட்டில்கள் விற்பனை செய்த 48நபர்கள் கைது, 872 மதுபாட்டில்கள் பறிமுதல்

262 மதுரை : மதுரை மாநகரில் நேற்று (28.12.2019) சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மதுரை மாநகர காவல் ஆணையர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami