வாலிபர் கொலை வழக்கில் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகள் 5 பேரை கைது செய்த இராணிப்பேட்டை காவல்துறையினர்

Admin

ராணிப்பேட்டை:  ராணிப்பேட்டை, அரக்கோணம் நன்னுமீரான் தெருவை சேர்ந்த சங்கர், இவரது மகன் பிரவீனை(24)  கடந்த 15ம் தேதி அரக்கோணம் தூய அந்திரேயர் பள்ளி அருகே 5 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது .

இதுகுறித்து தகவல் அறிந்த அரக்கோணம் டவுன் காவல் ஆய்வாளர் திரு.முத்துராமலிங்கம் தலைமையிலான காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று பிரவீன் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்தனர். கொலை நடந்த இடத்தை காவல் துணை கண்காணிப்பாளர் திரு.மனோகரன் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக பிரவீன் உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தநிலையில் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பிரவீனை அரக்கோணம் புதிய பஸ் நிலையம் பகுதியில் சேர்ந்த சசி குமார் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.

இந்த நிலையில் காவல்துறையினர் நேற்று எஸ்ஆர்கே பகுதிக்குள் சென்று சென்று கொண்டிருந்த சசிகுமாரை கைது செய்தனர் பின்னர் அவர் கொடுத்த தகவலின் பேரில், அரக்கோணம் எஸ் ஆர் கேட் அருகே உள்ள அரசுப் பள்ளி பின்புறத்தில் செடி கொடிகள் அடர்ந்த பகுதியில் பதுங்கி இருந்த, அவரது நண்பர்களான அரக்கோணம் திருப்பதி பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம்(19), அஜித்குமார்(22) மற்றும் 17 வயதுக்குட்பட்ட இரண்டு சிறுவர்கள் என நான்கு பேரை காவல்துறையினர்கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், பரபரப்பு தகவல்கள் கிடைத்தன. கடந்த 2005ஆம் ஆண்டு மோகன் என்பவர் அரக்கோணம் அருகே கொலை செய்யப்பட்டார். அந்த கொலைக்கு பழிக்குப்பழி வாங்கும் நோக்கத்துடன் பிரவீனை கொலை செய்ததாக அவர்கள் கூறினர்.

வேகமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த காவல் துணை கண்காணிப்பாளர் திரு.மனோகரன், காவல் ஆய்வாளர் திரு. முத்துராமலிங்கம், தாலுகா காவல் ஆய்வாளர் திரு. அண்ணாதுரை மற்றும் காவல்துறையினரை ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. மயில்வாகனன் அவர்கள்  பாராட்டினார்.

 

நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்ட போக்குவரத்து காவலர்களுக்கு, DIG தலைமையில் பயிற்சி வகுப்பு

173 திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடியில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் 17.12.2019  நடைபெற்ற நிகழ்ச்சியில் திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் உயர்திரு. க.ஜோஷி நிர்மல் […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami