76
Read Time59 Second
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே 11 வயது மதிக்கத்தக்க சிறுமியை முருகானந்தம் (29) என்பவர் ஆறு மாத காலமாக பாலியல் தொந்தரவு செய்து மிரட்டி வந்துள்ளார்.
இதனையறிந்த சிறுமியின் தாயார் பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரினை தொடர்ந்து நிலைய ஆய்வாளர் திருமதி.தேன்மொழி அவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த முருகானந்தத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
திண்டுக்கல்லில் இருந்து
நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா