சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் கொலையாளிகள் கைது செய்த விருதுநகர் காவல்துறையினருக்கு பாராட்டு

Admin
0 0
Read Time2 Minute, 16 Second

விருதுநகர்: கடந்த 12.12.2019 அன்று திருச்சுழி காவல் உட்கோட்டம் பரளச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராணிசேதுபுரம் கிராமத்தை சேர்ந்த சத்தியபாமா 52/19 என்பவரை காணவில்லை என்று அவரது மகன் திரு.பிரபாகரன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு காணாமல் போன நபரை தேடி வந்த நிலையில், 13.12.2019 அன்று காணாமல் போன சத்யபாமா என்பவர் கொலையுண்டு சடலமாக ராணி சேதுபுரம் காட்டுப்பகுதியில் இறந்து கிடப்பதை கண்டுபிடித்து பிரேதத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததை தொடர்ந்து, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பெருமாள் IPS., அவர்கள் உத்தரவுப்படி திருச்சுழி காவல் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.சசிதர் அவர்களின் மேற்பார்வையில், காவல் வட்ட ஆய்வாளர் திரு. மூக்கன்  அவர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. N. முத்துக்குமார்,  தலைமை காவலர் திரு. விக்னேஸ்வர மூர்த்தி, காவலர் திரு. சத்யராஜ்  உள்ளிட்ட தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடி வந்த நிலையில் 14.12.2019 அன்று கொலையாளிகளான அழகர் என்ற அழகர்சாமி 25 /19, ராமநாதன் என்ற நாகநாதன் 37/19, சோலையப்பன் 44/19 ஆகியோரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் கொலையாளிகள் கைது செய்யப்பட்டதை அடுத்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.

 

நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இராமநாதபுரத்தில் கல்லூரி மாணவிகளுக்கு காவலன் SOS குறித்த விழிப்புணர்வு

705 இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.V.வருண்குமார், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்படி, SIT College மற்றும் பட்டினம்காத்தான்  சோதனை சாவடியில் காவலன் SOS மொபைல் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami