Read Time1 Minute, 5 Second
தஞ்சாவூர் : தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று (11.12.2019) ம் தேதி தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் திரு.J.லோகநாதன் IPS, அவர்கள் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.S.மகேஸ்வரன் அவர்கள் கல்லூரியில் பயிலும் 4000 மாணவிகளுக்கு பெண்கள் பாதுகாப்புக்கென தமிழக காவல்துறையால் உருவாக்கப்பட்டுள்ள KAVALAN SOS செயலியின் பயன்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தஞ்சாவூர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ரவிச்சந்திரன் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டார்கள்.
நமது செய்தியாளர்
குடந்தை
ப-சரவணன்
கும்பகோணம்