கோவை கிரைம் செய்திகள்

Admin
Read Time3 Minute, 51 Second

நகை திருடியவர் கைது

கோவை மாவட்டம் ஆறுமுககவுண்டனூரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் சிலை வடிவமைக்கும் தொழில் செய்து வருகிறார். இவர் தொழில் நிமித்தமாக கடந்த 30. 9 .2019 ஆம் தேதி திருச்சிக்கு சென்றுள்ளார்.

அன்று இரவு அவரது வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 12 பவுன் தங்க நகையை திருடிச் சென்றுள்ளார். இது சம்பந்தமாக பேரூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, காவல் ஆய்வாளர் திரு.சுகவனம், உதவி ஆய்வாளர் திரு. ஜான் ரோஸ் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டு, சேலம் மாவட்டத்தை சேர்ந்த மனோஜ் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 12 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்து மேற்படி நபரை சிறையில் அடைத்தனர்.

மொபைல் போன் திருடியவர் கைது

கோயம்புத்தூர் மாவட்டம் சின்னக் குயிலே சேர்ந்த பழனிச்சாமி என்பவர் செட்டிபாளையம் மகாலட்சுமி பேக்கரி முன்பு நின்று கொண்டிருந்த  அவருடைய பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த, விவோ மொபைல் போனை திருட்டு போனது. இது சம்பந்தமாக புதுக்கோட்டையை சேர்ந்த பழனிசாமி என்பவரை கோபிசெட்டிபாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. அருள் பிரகாஷ் அவர்கள் கைது செய்து சிறையில் அடைத்தார்.

 

கோவையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவர் கைது

கோவை மாவட்ட மதுவிலக்கு அமலாக்க காவல்துறையினர் மற்றும் உட்கோட்ட காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில்  (04/12/2019) சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவர் கைது செய்து சுமார் 86 மது பாட்டில்கள் மற்றும் 16 லிட்டர் கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

கோவை மாவட்டம் மதுவிலக்கு அமலாக்க காவல்துறையினர் (06/12/2019) சட்டவிரோதமாக மது விற்பனையை தடுக்கும் பொருட்டு கோவை மாவட்டம் முழுவதும் நடத்திய அதிரடி சோதனையில், கள்  ற்றும் மது விற்பனை செய்து அவர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து சுமார் 20 லிட்டர்கள் கள் மற்றும் 44 மதுபாட்டில்கள் கைப்பற்றினர்.

காப்பர் ஸ்கிராப் வைத்திருந்தவர்கள் திருடியவர்கள் கைது

கோவை மாவட்டம் செட்டிபாளையம் காவல் நிலைய பகுதியில் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்த ஜெயப்பிரகாஷ் மற்றும் துறை ஆகியோர்கள், கம்பெனியில் இருந்து, சுமார் 50 கிலோ மதிக்கத்தக்க காப்பர் ஸ்கிராப் களை திருடியுள்ளனர். இது சம்பந்தமாக செட்டிபாளையம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து உதவி ஆய்வாளர் திரு அருள் பிரகாஷ் என்பவர் மேற்படி ஜெயப்பிரகாஷ் மற்றும் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தார்.

 

கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்


A. கோகுல்

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கும்பகோணத்தில் கழிவு நீர் தேங்கி உள்ளதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போலீசார் சமரசம்

339 தஞ்சாவூர்: கும்பகோணம் நகராட்சி பதினைந்தாவது வார்டுக்குட்பட்ட வினைதீர்த்தான் தெருவில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக (கழிவு நீர்) சாக்கடை நீர் குளம்போல் தேங்கி உள்ளதால்  கொசு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami