738 சி.சி.டி.வி கேமராக்கள் மற்றும் காவலர் ஓய்வு அறையை திறந்து வைத்த சென்னை காவல் ஆணையர்

Admin
Read Time2 Minute, 1 Second

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் அடையார் காவல் மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 738 சி.சி.டி.வி கேமராக்களின் இயக்கத்தை துவக்கி வைத்தார். மேலும் அடையாறு மற்றும் வேளச்சேரி காவல் நிலையத்தில் கட்டப்பட்ட காவலர் ஓய்வு அறை மற்றும் வரவேற்பறையை திறந்து வைத்து பார்வையிட்டார்.

06.12.2019 நேற்று மாலை வேளச்சேரி காவல் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அடையாறு காவல் மாவட்டத்தில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள 738 சி.சி.டி.வி கேமராக்களின் இயக்கத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப., அவர்கள் துவக்கி வைத்தார். மேலும் வேளச்சேரி காவல் நிலைய வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட காவலர் ஓய்வு அறை மற்றும் வரவேற்பறையை திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் அடையாறு காவல் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட காவலர் ஓய்வு அறையை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், தெற்கு கூடுதல் ஆணையாளர் திரு.பிரேம்ஆனந்த் சின்ஹா, இ.கா.ப., தெற்கு மண்டல இணை ஆணையாளர் திருமதி.சி.மகேஸ்வரி, இ.கா.ப., அடையார் மாவட்ட காவல் துணை ஆணையாளர் திரு.பி.பகலவன், இ.கா.ப, காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.

 

சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்


அப்துல் ஹாபிஸ்
வண்ணாரப்பேட்டை

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திண்டுக்கல் காவலர் நிறைவாழ்வு பயிற்சி முகாம்கள், DSP -க்கள் துவக்கி வைப்பு

90 திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில் உள்ள பழனி மஹாலில் 07.12.19 சனிக்கிழமை நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி முகாமினை ஆயுதப்படை காவல் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami