இராமநாதபுரத்தில் செல்போன் பழுது நீக்க கொடுத்ததால், சிக்கலில் மாட்டிக்கொண்ட பெண், மீட்ட காவல்துறையினர்

Admin
Read Time6 Minute, 37 Second

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே ரெகுநாதபுரத்தை சேர்ந்த பெண் ஒருவர், பழுதான தனது செல்போனை, ராமநாதபுரத்தில் உள்ள ஒரு கடையில் கொடுத்துள்ளார்.

அந்த செல்போனில் இருந்த படங்களையும், வெளிநாட்டில் இருந்த கணவர் உடன் அந்த பெண் பேசிய வீடியோ காட்சிகளையும், கணினியில் கடையில் இருந்தவர்கள் பதிவு செய்துள்ளனர். செல்போனை சரி செய்து சம்பந்தப்பட்ட பெண்ணிடம் அவர்கள் கொடுத்துள்ளனர்.

பின்னர் இரண்டு நாட்கள் கழித்து, அந்த பெண்ணை தொடர்பு கொண்டு அவரது ஆபாச படங்கள் தங்களிடம் உள்ளதாகவும், அதை இன்டர்நெட்டில் பதிவேற்றம் செய்யாமல் இருக்க 5 லட்சம் ரூபாய் தர வேண்டும் என கேட்டு மிரட்டி உள்ளனர்.

இந்த தகவலை கேட்டதும் அதிர்ச்சியில் உறைந்து போன அந்தப் பெண் செய்வதறியாது பயம் மற்றும் பதற்றத்துடன் அழுது கொண்டிருந்தார். ஒரு வார காலமாக கணவரிடமும், உறவினர்களிடமும் சொல்ல முடியாமல் தவித்தார்.

இவர் கவலையாக இருப்பதை கண்ட மாமனார் என்ன பிரச்சனை என்று கேட்ட போது, நடந்த சம்பவங்களை கூறி அழுதுள்ளார். இதனையடுத்து உடனடியாக உச்சிப்புளி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். காவல் ஆய்வாளர் திரு.முத்துபிரேம் சந்த்திடம், நடந்த விவரங்களைக் கூறி படித்துக் கொண்டிருந்தபோதே பெண்ணின் செல்போனில் மர்ம நபர்கள் தொடர்பு கொண்டுள்ளனர்.

காவல் நிலையத்தில் அதிகாரிகள் முன்பே அவரிடம் பேசிய அந்த பெண் பணம் இல்லை எனக் கூறி அழுதுள்ளார். உடனே சரியாக வராது நாளை ஒருநாள் மட்டுமே, பணம் வரவில்லை என்றால், படங்களை இன்டர்நெட்டில் ஏற்றி விடுவேன், என மிரட்டி விட்டு இணைப்பைத் துண்டித்துள்ளனர்.

காவல்துறை அதிகாரிகள் மீண்டும் செல்போன் அழைப்பு வந்தால், பணத்தை தருவதாகவும், குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு வந்து பெற்றுக் கொள்ளுமாறும் போனில் பேச சொல்லி உள்ளனர். அதேபோல இரண்டு மணி நேரத்திற்குப் பின்னர் மீண்டும் செல்போனில் அழைப்பு வந்துள்ளது. அப்போது அந்த பெண் மறுநாள் நகையை வைத்து பணத்தை தருவதாக சொல்லி ராமநாதபுரம் பஸ் ஸ்டாப் அருகில் வரச் சொல்லிவிட்டார்.

இந்த நிலையில் உச்சிப்புளி காவல் நிலைய ஆய்வாளர் திரு.முத்துபிரேம் சந்த் தலைமையில் காவல் உதவி ஆய்வாளர் திரு.வசந்தகுமார், தனிப் பிரிவு தலைமை காவலர் திரு.மருது, பஸ் ஸ்டாப் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையை ஒட்டியவாறு மறைந்திருந்தனர். ஆனால் அந்த இடத்தில் சிசிடிவி கேமராக்கள் உள்ளதால் நேராக கலெக்டர் அலுவலகம் நடந்து செல்லுமாறும், தான் வந்து பணத்தை வாங்கிக் கொள்வதாகவும், அந்த மர்ம நபர் கூறியுள்ளான்.

அதனை தொடர்ந்து அந்தப் பெண் நடந்து செல்லும்போது பின்னல் நெருக்கி வந்தவனை அங்கு மறைந்திருந்த தனிப் படை காவலர் மருது மடக்கிப் பிடித்து அவரிடம் இருந்து தப்பி ஓட முயற்சித்த போது அருகில் மறைந்திருந்த காவல்துறையினர், அவனை வளைத்துப் பிடித்தனர்.

விசாரணையில் அவன் ராமநாதபுரம் சுண்ணாம்பு காரை தெருவைச் சேர்ந்த சோமசுந்தரம் என்பது தெரியவந்தது. தனக்கு ஏதும் தெரியாது என்றும் ரகுநாத புரத்தைச் சேர்ந்த சுரேஷ் என்கிற சூரியகுமார் தான் பணத்தை வாங்கி வர சொன்னதாகவும், சோமசுந்தரம் கூறியுள்ளான்.

இதனையடுத்து பணத்தை பெற்றுக் கொண்டதாகவும், வந்து வாங்கிச் செல்லுமாறு சூரியகுமாரிடம், சோம சுந்தரரை செல்போனை காவல்துறையினர் பேச வைத்துள்ளனர். அதன்படி பெரியபட்டினம் விலக்கு அருகே வரச்சொல்லி சூரிய குமாரையும், கையும் களவுமாக பிடித்தனர்.

இருவரிடமும் நடத்திய விசாரணையில், பழுதான செல்போன்களை கடைக்குச் சென்று சரிசெய்து, கொடுக்கும் வேலை செய்து வந்ததாக கூறி உள்ளனர். இருவரையும் கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பேஸ்புக், வாட்ஸ்அப், டிக்டாக் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தும் பெண்கள் தங்களது புகைப்படத்தையும், சொந்த தகவல்களையும் பதிவிடாமல் இருப்பதே நல்லது என்று காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஒருவேளை செல்போன் பழுது ஆனால் அதில் இருக்கும் படங்கள் மற்றும் தகவல்கள் உள்ளிட்ட விவரங்களை முழுவதும் அழிந்த பின்பு கடைகளில், பழுது நீக்க கொடுப்பதே சிறந்தது என்று சுட்டிக் காட்டுகின்றனர். எவரேனும் இது போன்று பணம் கேட்டு மிரட்டினால், பயப்படாமல், தயக்கமின்றி புகார் அளிக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் அறிவுறுத்துகின்றனர்.

 

இராமநாதபுரத்திலிருந்து
நமது குடியுரிமை நிருபர்
திரு.நம்பு குமார்

1 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இந்தியாவின் தலைசிறந்த 10 காவல் நிலையங்கள் பட்டியலில் தேனி காவல் நிலையம் 4 வது இடத்தை பிடித்துள்ளது

83 சென்னை:  2019 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் தலைசிறந்த 10 காவலர்கள் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 2019ம் ஆண்டுக்கான இந்தியாவின் தலை சிறந்த 10 காவல் […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

17 0 யானைக்கு ஐந்தறிவாம் ! மனிதனுக்கு ? - திருநெல்வேலி துணை ஆணையர் திரு.சரவணன் திருநெல்வேலி மாநகர சட்டம் ரூ ஒழுங்கு...
6 0 அரக்கோணம் மக்கள் மனம் கவர்ந்துள்ள புதிய காவல் ஆய்வாளர் கோகுல்ராஜ் ராணிப்பேட்டை : அரக்கோணம் முன்னர் வேலூர் மாவட்டத்தின் ஒரு...
9 0 நத்தம் காவல் ஆய்வாளரின் உன்னத சேவை, பொதுமக்கள் பாராட்டு திண்டுக்கல் :உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரசால் அரசால் பல...
7 0 ஊனமுற்றோருக்கு உதவி பெண் ஆய்வாளர் திருவள்ளூர்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று அதிகரித்து காணப்படுவதால் 144 தடை உத்தரவு...
10 0 பயணிகள் தனிநபர் இடைவெளி குறித்து விழுப்புரம் SP துண்டுபிரசுரம் விழுப்புரம் : 50 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும் என...
9 0 கடலூர் மாவட்ட காவல்துறையினரின் விழிப்புணர்வு மற்றும் பாராட்டுக்க்கள் கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு M. ஸ்ரீ...
3 0 மதுரையில் ஒருவருக்கு குண்டர் தடுப்பு சட்டம் மதுரை : மதுரை, சொக்கநாதபுரம், புது விளாங்குடியைச் சேர்ந்த அன்னக்கொடி மகன் பழனிகுமார்...
8 0 வழி தெரியாதவரை அவரது உறவினருடன் சேர்த்த காவலருக்கு பாராட்டு. திருப்பூர் : திருப்பூர் மாநகர தெற்கு காவல் நிலைய இரண்டாவது...
13 0 வாளால் தாக்கி கொலை மிரட்டல், 1 கைது சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வைகை வடகரை பகுதியை...
7 0 வாளால் கேக் வெட்டி பிறந்தநாள், காவல்துறையினர் நடவடிக்கை இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில் வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியவர்களை...
7 0 போக்குவரத்துக்காக தமிழகம் 8 மண்டலங்களாக பிரிப்பு – எந்த மண்டலம்? எந்த மாவட்டம்? தமிழகத்தில் ஜூன் 30-ம் தேதி வரை...
6 0 முடிதிருத்தம் செய்யும் ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்த திண்டுக்கல் காவல்துறையினர் திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் முடி திருத்தம்...
10 0 மனநலம் குன்றிய பெண்ணை குடும்பத்தினருடன் சேர்த்து வைத்த தலைமை காவலர் திருப்பூர் மாநகர் ஊரக காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும்...
3 0 காவலரை தாக்கிய இருவர் கைது திருப்பூர் : திருப்பூர் மாநகர் வேலம்பாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் முதல் நிலை...
9 0 #policenewsplus #TNPolice #police #policeofficer #policeforlife

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami