“மண் எடுப்பதை நிறுத்துங்கள், நமது எதிர்காலத்தை காப்பாற்றுங்கள்”, உலக மண் தினத்தை முன்னிட்டு நாகை SP வேண்டுகோள்

Admin
Read Time1 Second

நாகப்பட்டினம் : பூமியின் வாழ்க்கைக்கு மண் அடிப்படை எனவே மண்ணின் எதிர்காலத்தை உறுதிப்படுத்த அவற்றின் பாதுகாப்பு மிக முக்கியமானது. ஆனால் மண் அரிப்பு மிகவும் வளமான மேல் மண்ணை அகற்றுவதன் மூலம் நமது உற்பத்தி நிலத்தை ஆபத்தில் ஆழ்த்துகிறது. மண் அரிப்பு முதலிட அச்சுறுத்தலை அதாவது நமது மேல் பரப்பில் உள்ள மண்ணை, நீரோடைகள், ஆறுகள், ஏரிகளில் கழுவி, கடல் முழுவதும் மண் துகள்களை வீசுகிறது.

இது எல்லா இடங்களிலும் இயற்கையாகவே நிகழ்கிறது என்றாலும், நீடிக்க முடியாத நாளுக்கு நாள் நடைபெறும் மனித நடவடிக்கைகள், இயற்கையின் மீதான மாசுபாடு கணிசமாக அதிகரிக்கின்றன. 95% உணவு மண்ணிலிருந்து வருவதால், அரிப்பு தணிப்பு ஒரு நிலையான மற்றும் உணவு பாதுகாப்பான உலகிற்கு முக்கியமானது.

இந்த ஆண்டு, உலக மண் தின கொண்டாட்டம் உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளில் நடைபெறவிருக்கும் “மண் அரிப்புகளை நிறுத்துங்கள், நமது எதிர்காலத்தை காப்பாற்றுங்கள்” என்ற கருப்பொருளில்” மண்ணின் முக்கியத்துவம் மற்றும் மண்ணின் நிலையான பயன்பாடு மற்றும் நிர்வாகத்தை ஊக்குவித்தல், மண் பாதுகாப்பு மற்றும் பாதுகாத்தல் வேண்டும் என கொண்டாடப்படுவதால் நாமும் மண் வளத்தை பாதுகாக்க பொருளாதார ரீதியாக மண்வளத்தை சுரண்டுதல் மற்றும் இயற்கையில் கிடைக்கக்கூடிய கனிம வளங்களை சூழலியல் அளவுகோளுக்கு அதிகமாக சுரண்டப்படுவதால் மண்வளம் கெட்டு நிலத்தடி நீர் அதி பாதாளத்தில் சென்றுவிடும்.

இதனால் நம் வருங்கால சந்ததிகள் வாழ்வியல் சூழல் பாதிக்கப்படும் என்பதால் இதுபோன்ற இயற்கைக்கு எதிரான எதிர்வினையினை விடுத்து மண்வளம் காக்க அனைவரும் முன் வர வேண்டும் எனவும் மண் வளத்திற்கு எதிராக வர்த்தக ரீதியாக மண் கடத்தலில் ஈடுபட்டால் கீழ் கண்ட தொலைபேசி எண்களில்
9498100905
8939602100
04365242999
04365248119
24 க்கு மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் கேட்டுக்கொண்டார்கள்.

 

 

நாகப்பட்டினத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.பிரகாஷ்

 

 

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இனி நாகையில் போக்குவரத்து விதி மீறினால், இ-சாலான் வழங்க SP உத்தரவு

105 Share on Facebook Tweet it Share on Google Pin it Share it Email நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் போக்குவரத்து விதி […]

மேலும் செய்திகள்

Bitnami